”விடுதலை – பாகம் 1”: ட்விட்டர் விமர்சனம் இதோ!

Published On:

| By christopher

தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கியுள்ள திரைப்படம் விடுதலை. இந்த படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 31) வெளியாகியுள்ளது.

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம் சமூகவலைதளங்களில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி. அவருடன் நாயகியாக பவானி ஸ்ரீயும் மற்றும் முக்கிய கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

மேலும் பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் ஏற்கெனவே வெளிவந்துள்ள படத்தின் பாடல்கள் அனைத்தும் கவனம் பெற்றுள்ளன. இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் என்று வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ள வெற்றிமாறன், தற்போது மீண்டும் ஒரு அழுத்தமான கதையை அழகாக திரையில் காட்டியுள்ளதாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை முதல் பாகம் குறித்து ட்விட்டரில் ரசிகர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் இதோ…

https://twitter.com/Aakash15433375/status/1641716117059297282?s=20

கிறிஸ்டோபர் ஜெமா

திரையரங்கில் தீண்டாமை: மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

பொம்மன், பெள்ளி பராமரித்த குட்டியானை உயிரிழப்பு!

”மதுரை பட்ஜெட்”: பட்ஜெட் புத்தகத்திற்கே தட்டுப்பாடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel