சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா: ஏன் தெரியுமா?

சினிமா

ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் சூர்யாவின் 44 வது படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

“கங்குவா” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் சூர்யாவின் 43-வது படமான “புறநானூறு” படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென புறநானூறு திரைப்படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சூர்யாவுக்கும் சுதாவுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு காரணமாகத்தான் புறநானூறு திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த செய்தியை கேட்டு வருத்தத்தில் இருந்த சூர்யாவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சூர்யா 44 அப்டேட் வெளியானது.

சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விஜய்க்காக தயார் செய்த கதையில் தான் தற்போது சூர்யா நடிக்கிறார் என்று ஒரு தகவல் வெளியானது.

ஆனால், சூர்யா 44 படத்திற்கான பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாகவே நடந்து வருவதாகவும், இது முழுக்க முழுக்க சூர்யாவுக்காகவே எழுதப்பட்ட கதை என்றும் சிலர் கூறுகின்றனர்.

இந்நிலையில், தற்போது சூர்யா 44 படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், நடிகர் சூர்யா சம்பளம் வாங்காமல் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படம் ரிலீஸான பிறகு ஈட்டும் லாபத்தில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவருக்கும் பங்கு இருப்பதினால் தற்போது சம்பளமே வாங்காமல் நடிகர் சூர்யா இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும், நடிகர் சூர்யாவை போலவே கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்காமலேயே இந்த படத்தை இயக்குவதாக சொல்லப்படுகிறது. விரைவில் சூர்யா 44 குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: முன்னந்தலையில் முடிகள் கொட்டாமல் இருக்க…

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காய குழம்பு

சொந்த மண்ணில் அபார வெற்றி… தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0