தேர்தல் பிரச்சாரம்!
பிரதமர் மோடி – ரோடு ஷோ, சென்னை
திமுக தலைவர் ஸ்டாலின் – மதுரை, சிவகங்கை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – தேனி, திண்டுக்கல்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா – மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கோவை
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் தீர்ப்பு!
மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை கைதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் இன்று (ஏப்ரல் 9) தீர்ப்பு வெளியாகிறது.
சிஏஏ வழக்கு விசாரணை!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
யுகாதி பண்டிகை!
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் இன்று யுகாதி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
விசிக தேர்தல் அறிக்கை!
விசிக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிடுகிறார்.
பஞ்சாப், ஹைதராபாத் மோதல்!
இன்றைய ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
ஜோக்கர் 2 டிரெய்லர் ரிலீஸ்!
டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் டிசி காமிக்ஸ் வில்லனாக நடித்த ஜோக்கர் 2 படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
பெட்ரோல், டீசல் விலை!
சென்னையில் இன்று 23-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75-க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.34-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்!
பிரதமர் மோடி சென்னை வருகையை ஒட்டி ஜிஎஸ்டி சாலை முதல் அண்ணாசாலை ஒய்எம்சிஏ வரையும், நந்தனம் முதல் தியாகராய நகர் வரையும் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை வாகன ஓட்டிகள் இந்த சாலைகளில் பயணம் செய்வதை தவிர்க்குமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
வானிலை நிலவரம்!
தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காய குழம்பு
சொந்த மண்ணில் அபார வெற்றி… தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா