கோடையில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கும் சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தி இந்தக் குழம்பு செய்யலாம். அனைவருக்கும் ஏற்ற இந்த குழம்பு, வாய்ப்புண், கண் வலி போன்றவற்றை விரைவில் குணமாக்கும் வல்லமை கொண்டது.
என்ன தேவை?
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்
மிளகாய்த்தூள் – காரத்துக்கேற்ப
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
பொடித்த வெல்லம் – அரை டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை – சிறிதளவு
புளிக்கரைசல், நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் சமைப்பது?
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, பிறகு சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் புளிக்கரைசல், மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பனானா ஐஸ் ஷேக்
சண்டே ஸ்பெஷல்: மட்டன், சிக்கன்… எப்படித் தேர்ந்தெடுப்பது?
சொந்த மண்ணில் அபார வெற்றி… தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா
கொல்கத்தாவுக்கு காப்பு கட்டியாச்சி : அப்டேட் குமாரு