லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் தலைவர் 171 படத்தின் கதை மற்றும் நடிகர்கள் குறித்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.
வேட்டையன் படத்திற்கு பிறகு லோகேஷ் இயக்கும் புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார். சமீபத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி கைகளில் விலங்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, டைட்டில் டீசர் ஏப்ரல் 22-ம் தேதி வெளியாகும் என அறிவித்தது.
இதற்கிடையில் கமலின் படத்திற்கு விக்ரம் என அவரின் பழைய படத்தலைப்பையே சூட்டியது போல, இந்த படத்திற்கு ‘கழுகு’ என ரஜினி படத்தின் தலைப்பை லோகேஷ் சூட்டி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் படத்தின் கதை மற்றும் படத்தில் நடிக்கவிருக்கும் பிறமொழி நடிகர்களின் விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன. அதன்படி தனது முந்தைய படங்களான மாநகரம், கைதி போல இப்படமும் ஒரே நாளில் நடப்பது போல லோகேஷ் கதையை எழுதி இருக்கிறாராம்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட்டின் பிரபலம் ரன்வீர் சிங் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம். இதேபோல மலையாளத்தில் இருந்து பிருத்விராஜ் அல்லது மம்முட்டி இருவரில் ஒருவரை இப்படத்தில் நடிக்க வைத்திட படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.
மறுபுறம் கோலிவுட்டில் இருந்து ராகவா லாரன்ஸ், சாண்டி மாஸ்டர் இருவரும் இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் டைட்டில் டீசரை வெளியிடும் போது நடிக, நடிகையர் குறித்த அறிவிப்பினையும் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக தன்னுடைய 172-வது படமாக உருவாகும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தஞ்சை பெரியகோவில்: கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை பெருவிழா!
Gold Rate: ஷாக் கொடுக்கும் தங்கம் விலை: சவரன் ரூ.53 ஆயிரத்திற்கு விற்பனை!
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்: கடைசி மூச்சு வரை கட்சிப்பணி!