வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘GOAT’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. prashanth joined goat movie
இதில் விஜயுடன் இணைந்து சினேகா, பிரசாந்த், மோகன், அஜ்மல், பிரபுதேவா, லைலா என முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர்.
தற்போது விஜய் – மீனாட்சி சௌத்ரி இருவர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு விரைவில் ரஷ்யா செல்லவிருக்கின்றது.
இப்படத்திற்காக யுவன் இசையில் இளையராஜா ஒரு பாடலையும், நடிகர் விஜய் ஒரு பாடலையும் பாடியிருக்கின்றனர். படத்தின் பாடல்களை கங்கை அமரன், அறிவு, கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதியுள்ளனர்.
‘GOAT’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகின்ற மே மாதம் வெளியாகிறது. இது ஒரு ரொமாண்டிக் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விஜயின் 5௦-வது பிறந்தநாள் ஸ்பெஷலாக படத்தினை ஜூன் மாதம் வெளியிட ஏஜிஎஸ் நிறுவனம் முடிவெடுத்து இருக்கிறதாம்.
சமீபத்திய புகைப்படங்களில் விஜய் கிளீன் லுக்கில் இருக்கிறார். எனவே இளம் விஜய் தொடர்பான காட்சிகள் தான் இனிமேல் ஷூட் செய்யப்படும் என தெரிகிறது. இதனால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நடிகரும், இயக்குநருமான பிரசாந்தின் தந்தை தியாகராஜன் ‘GOAT’ படத்தில் பிரசாந்த் நடிக்க சம்மதித்தது ஏன்? என்னும் கேள்விக்கு விடை அளித்துள்ளார். இதுகுறித்து அவர், ”பலரும் இந்த கேள்வியை என்னிடம் கேட்கின்றனர்.
பான் இந்தியா படங்களில் மல்டி ஸ்டார்கள் இணைந்து நடிப்பது நல்ல விஷயம் தான். விஜய்யும், பிரசாந்தும் நல்ல நண்பர்கள். எனவே தான் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டு பிரசாந்த் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இதில் பிரசாந்த் வில்லனாக நடிக்கவில்லை. அவருக்கு முக்கியமான கதாபாத்திரத்தை தான் வெங்கட் பிரபு அளித்திருக்கிறார். படம் நன்றாக உருவாகி வருகிறது.
பிரசாந்த் நடிக்கும் படங்களை அவர்தான் தேர்வு செய்து வருகிறார். நான் அதில் எல்லாம் தலையிடுவதில்லை. நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்கிறேன் என்று சொன்னால் மட்டும் தடுத்து விடுவேன்.
அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அந்தாதூன்’ திரைப்படம் வருகின்ற சம்மரில் வெளியாகும்”, என விளக்கம் அளித்திருக்கிறார்.
விஜய், அஜித்திற்கு முன்பே தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய டாப் ஸ்டார் பிரஷாந்த் ‘GOAT’ படத்தில் ஒப்பந்தமான பின்னர், ஏகப்பட்ட வாய்ப்புகள் வருவதாகவும் விரைவில் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேர்தல் பத்திர விவரங்கள் எப்போது வெளியாகும்?: தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!
RCB: களமிறங்கிய ‘காந்தாரா’ ஹீரோ… இனி யாராலும் ‘இத’ தடுக்க முடியாது!