தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் ரோபோ சங்கர் திடீரென உடல் எடை குறைந்து மெலிந்த நிலையில் காணப்பட்டதால் அவர் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் அசத்தப் போவது யாரு, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செய்து புகழ்பெற்றவர் ரோபோ சங்கர். அதன்பின்னர் தமிழ் திரையுலகிலும் பிரபல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார்.

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடிக்க துவங்கி உள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் இந்திரஜா நடித்த பாண்டியம்மா கேரக்டர் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது அவரும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

இதற்கிடையே அப்பாவும், மகளும் சேர்ந்து அவ்வபோது ரீல்ஸ் வீடியோக்களை தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு லைக்ஸ்களை அள்ளி வருகின்றனர்.

இந்நிலையில் எப்போதும் ஆக்டிவாக, சிரித்த முகத்துடன் காணப்படும் ரோபோ சங்கர், சமீபத்திய புகைப்படத்தில் சோகமாக, உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பலரும் ரோபோ சங்கருக்கு என்னாச்சு என்று சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
அவரது மெலிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர் உடல் எடை குறைந்ததற்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை.
கிறிஸ்டோபர் ஜெமா
தேர்வெழுதாத 50 ஆயிரம் மாணவர்களுக்குத் துணைத் தேர்வு!
தேர்வெழுதாத 50 ஆயிரம் மாணவர்களுக்குத் துணைத் தேர்வு!