உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா இன்று (ஏப்ரல் 6) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை பெருவுடையார் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான சித்திரை பெருவிழா இன்று (ஏப்ரல் 6) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றத்திற்கு முன்னதாக, பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி சந்திரசேகரர் கோவிலுக்குள் புறப்பாடாகி கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர், கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர்,நெய், பஞ்சகவ்வியம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர், பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த துணிகளைகொண்டு பிரம்மாண்ட கொடிமரத்தில் மங்கல வாத்தியம் முழங்க நந்தியம் பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நாள்தோறும் பல்லக்கிலும், சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் தஞ்சை பெரியகோவிலின் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
18 நாட்கள் நடைபெறும் இந்த சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: ஷாக் கொடுக்கும் தங்கம் விலை: சவரன் ரூ.53 ஆயிரத்திற்கு விற்பனை!
Video: ‘இந்த பாட்டு நல்லாருக்கு’… ஹீரோவுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட பிராவோ!