இளம் நாயகன் ஒருவருடன் சேர்ந்து, சென்னை அணியின் பந்துவீச்சாளர் பிராவோ தமிழ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
அறிமுக இயக்குநர் மீரா மஹதி இயக்கத்தில் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘டபுள் டக்கர்’.
இந்த திரைப்படம் நேற்று (ஏப்ரல் 5) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. வித்யாசாகர் இசையில் உருவாகியுள்ள இப்படத்தினை ஏர் பிஃளிக் நிறுவனம் தயாரித்துள்ளது.
பேண்டசி காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள டபுள் டக்கர் படத்தின் கினி கினி பாடல் கடந்த மாதம் வெளியானது. துள்ளலான இப்பாடலுக்கு ரசிகர்கள் ரீல்ஸ் செய்து சமூக வலைதளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பந்துவீச்சு பயிற்சியாளருமான டிஜே பிராவோ இப்பாடலுக்கு ஆட்டம் போட்ட செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது.
— videos (@videos4567) April 6, 2024
அதாவது சேப்பாக்கம் மைதானத்தில் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போது, இந்த பாடலை டிஜே மைதானத்தில் ஒலிக்க விட்டுள்ளார். எதேச்சையாக இப்பாடலை கேள்விப்பட்ட பிராவோ, வெகுவாக இம்ப்ரெஸ் ஆகி டபுள் டக்கர் படக்குழுவை தான் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு அழைத்துள்ளார்.
அங்கு நாயகன் தீரஜ் உடன் சேர்ந்து மேடையில் இந்த பாடலுக்கு பிராவோ குத்தாட்டம் போட்டுள்ளார். மஞ்சும்மேல் பாய்ஸ், பிரேமலு என பிறமொழி படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், நம்முடைய தமிழ் படத்தின் பாடலை டிஜே பிராவோ போன்ற உலகப்புகழ் பெற்ற வீரர் கொண்டாடி இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார்: கடைசி மூச்சு வரை கட்சிப்பணி!
திமுக விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி கவலைக்கிடம்!
இரண்டாவது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!