யானை படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் தயாராகி உள்ள படம் “ரத்னம்”. இது விஷாலின் 34 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ஹரியும் விஷாலும் இணைந்து பணியாற்றியுள்ள ரத்னம் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க, நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், போஸ்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குநர் ஹரி ஸ்டைலில், விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட ஒரு பக்கா கமர்ஷியல் ஆக்சன் படமாக ரத்னம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ரத்னம் படத்தின் செகண்ட் சிங்கிள் “எதனால எதனால என்மேல அக்கற” பாடல் இன்று (மார்ச் 29) வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் விவேகா வரிகள் எழுத, சிந்தூரி விஷால் இப்பாடலை பாடியிருக்கிறார்.
நடிகர் விஷாலும், நடிகை பிரியா பவானி சங்கரும் இடம் பெற்றுள்ள இந்த பாடலில், தனது காதலை முழுமையாக வெளிப்படுத்தாத ஹீரோவை பார்த்து ஹீரோயின் காதல் உருக்கத்துடன் கேள்வி கேட்பது போன்று வரிகள் எழுதப்பட்டிருக்கிறது.
தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.
இந்த படம் 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்!
Video: ‘ஆள விடுப்பா’ ஹர்திக்கால் கோபமான மலிங்கா… அப்போ அது உண்மைதானா?