மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தற்போது, இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.
ஒரே குடும்பம் என ரசிகர்களால் புகழப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு அவசர, அவசரமாக ஹர்திக் பாண்டியாவை குஜராத்திடம் இருந்து வாங்கி மும்பையின் கேப்டனாக நியமித்ததில் இருந்து, அணிக்குள் பெரும் பிளவு உண்டாகியுள்ளது.
ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததில் இருந்து அது தற்போது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. குறிப்பாக களத்திலும், டக் அவுட்டிலும் ரோஹித்திடம் இயல்பாக பேசும் வீரர்கள் ஹர்திக்கிடம் அதுபோல பேசுவதில்லை.
அதோடு முதல் போட்டி மட்டுமின்றி இரண்டாவது போட்டியிலும் தன்னுடைய சொதப்பல் முடிவுகளால், ஹர்திக் மீண்டும் ஒரு தோல்வியை மும்பை அணிக்கு பரிசளித்திருக்கிறார்.
Aadujeevitham: பிரித்விராஜ் இப்படி எல்லாம் செஞ்சாரா?
இந்த நிலையில் மும்பை அணியின் பவுலிங் கோச் மலிங்காவும், ஹர்திக்கிடம் கோபத்தை வெளிப்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Malinga Ki Hardik Ki Gattiga Adho Aindhi
Ninna Hug Kuda
Mottom Something Fishy pic.twitter.com/ToAARNW68w— Kiran (@KIRANPSPK45) March 28, 2024
டக் அவுட்டில் பொல்லார்ட் மற்றும் மலிங்கா இருவரும் ஆளுக்கு ஒரு சேரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது அங்கு வந்த ஹர்திக் பாண்டியா ஏதோ சொல்ல, மலிங்கா கோபமாக சேரினை விட்டு எழுந்து செல்கிறார்.
பொல்லார்ட் எழுந்து இடம்கொடுக்க முன்வருகிறார். ஆனால் மலிங்கா அவரை தடுத்துவிட்டு தானே எழுந்து செல்கிறார். வழக்கம்போல இதற்கும் பெரிதாக ரியாக்ஷன் கொடுக்காமல் ஹர்திக் பொல்லார்ட் உடன் அமர்ந்து பேசுகிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உள்ளே மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது. வரும் நாட்களில் இது பூதாகரமாக வெடிக்கக்கூடும்” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இந்தமுறை அந்த அணி பிளே ஆஃப்க்கு செல்லுமா? என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மோடி இன்று கலந்துரையாடல்!