நயன்தாராவின் ’கனெக்ட்’: என்ன ஸ்பெஷல்?

சினிமா

நடிகை நயன்தாரா நடித்திருக்கும் ’கனெக்ட்’ படத்தின் டீசர் இன்று (நவம்பர் 18) வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ’கனெக்ட்’ படத்தில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை ’மாயா’, ’கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

அனுபம் கெர், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் பிருத்வி சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு ’கனெக்ட்’ படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று ரவுடி பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது, ’கனெக்ட்’ படத்தின் டீசர் வெளியானது. டீசர் ஆரம்பிக்கும்போதே ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு நகரம், கடற்கரை மற்றும் பேருந்து நிறுத்தங்கள் தென்படுகின்றன.

பின்னர் ஒரு அறையில் இருந்து ”அம்மா ரொம்ப பயமா இருக்கு” என்று கதவைத் தட்டிக் கொண்டே ஒரு அலறல் சத்தம் மட்டும் கேட்கின்றது. அப்போது நயன்தாரா, பயத்துடன் ஒரு இருட்டு அறையில் இருப்பதுபோல் தெரிகிறது.

nayanthara connect movie teaser release today

ஒரு இருட்டான அறைக்குள் யாரோ ஒருவர் தனியாக செல்வதும் அந்த உருவத்தைக் கண்டு பயப்படுவது போலவும் டீசர் அமைந்துள்ளது. இதனை வைத்துப் பார்க்கும் போது நயன்தாராவின் ’கனெக்ட்’ படம் பேய் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் டிசம்பர் 22 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

மேலும் நயன்தாராவின் பிறந்தாள் சிறப்பாக விக்னேஷ் சிவன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நயன்தாராவின் நடிப்பில் உருவாகும் 81-வது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிக்கும் இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளார்.

மோனிஷா

லவ் யூ தங்கமே: நயனுக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஷ் சிவன்

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

2 thoughts on “நயன்தாராவின் ’கனெக்ட்’: என்ன ஸ்பெஷல்?

  1. can i get generic clomid pill [url=https://clomid.store/#]cheap clomid now[/url] can you buy clomid without insurance

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *