ரஜினி பட ஷூட்டிங்கில் ராணா

சினிமா

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெய் பீம் பட இயக்குனர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் தயாரிக்கும் படம் தலைவர் 170. இந்த படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. Rana Daggubati Vettaiyan Movie

இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன்  அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் வேட்டையன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். நடிகை ரித்திகா சிங்கும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் ரஜினியும் நடிகர் அமிதாப் பச்சனும் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்துள்ளனர். மும்பையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியும் நடிகர் அமிதாப் பச்சனும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினியுடன் நடிகர் பகத் பாசில் இணைந்து நடிக்கும் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது.

ஒரு உண்மை சம்பவத்தை மையக் கதையாக கொண்டு, ஒரு பக்கா ஆக்சன் படமாக வேட்டையன் படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

பல முக்கிய நடிகர்கள் வேட்டையன் படத்தில் கமிட் ஆகி இருப்பதால் ஒவ்வொருத்தருக்கும் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தை இயக்குனர் வழங்கியிருக்கிறார் என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் வேட்டையன் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட மகிழ்ச்சியான தருணத்தை நடிகர் ராணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து  உள்ளார். அந்த பதிவில் “Day-01 of Filming!! Let’s Fire it Up” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Rana Daggubati Vettaiyan Movie

வேட்டையன் படத்தில் ராணா தான் ரஜினியுடன் மோத போகும் முக்கிய வில்லன் என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் என்னும் வெளியாகவில்லை.

ரஜினியின் வேட்டையன் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’மஞ்சுமல் பாய்ஸ்’ வெற்றியை சிலாகித்த வெங்கட் பிரபு, பா.ரஞ்சித்

தமிழக அரசு விருதுகளை அள்ளிய ஜோதிகா – ஜெயம்ரவி திரைப்படங்கள்!

பெங்களூரு குண்டுவெடிப்பு : சென்னை இளைஞர்களுக்கு தொடர்பா?

 

Rana Daggubati Vettaiyan Movie

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *