2014-15 ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை ஜோதிகாவின் 36 வயதினிலே திரைப்படம் 7 விருதுகளையும், ஜெயம் ரவியின் தனி ஒருவன் திரைப்படம் 6 விருதுகளையும், மாதவனின் இறுதி சுற்று திரைப்படம் 6 விருதுகளையும் வென்றுள்ளது.
தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறைக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த விருதுகள் வழங்கப்படாமல் தடைப்பட்டு போனது.
இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழக அரசு எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நாளை மார்ச் 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ் பேரவை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற உள்ளது.
2014-15 ஆம் ஆண்டிற்கு தேர்வான சிறந்த படங்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய பட்டியல் பின் வருமாறு:
.சிறந்த படம் முதல் பரிசு: தனி ஒருவன்
.சிறந்த படம் இரண்டாம் பரிசு: பசங்க 2
.சிறந்த படம் மூன்றாம் பரிசு: பிரபா
.சிறந்த படம் சிறப்புப் பரிசு: இறுதிச்சுற்று
.பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு): 36 வயதினிலே
.சிறந்த நடிகர்: ஆர்.மாதவன் (இறுதிச்சுற்று)
.சிறந்த நடிகை: ஜோதிகா (36 வயதினிலே)
.சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு: கௌதம் கார்த்திக் (வை ராஜா வை)
.சிறந்த நடிகை சிறப்புப் பரிசு: ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
.சிறந்த வில்லன் நடிகர்: அரவிந்த்சாமி (தனி ஒருவன்)
.சிறந்த நகைச்சுவை நடிகர்: சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)
.சிறந்த நகைச்சுவை நடிகை: தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/ 36 வயதினிலே)
.சிறந்த குணச்சித்திர நடிகர்: தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)
.சிறந்த குணச்சித்திர நடிகை: கவுதமி (பாபநாசம்)
.சிறந்த குழந்தை நட்சத்திரம்: 1). மாஸ்டர் நிஷேஸ் 2). பேபி வைஷ்ணவி (பசங்க 2)
.சிறந்த இயக்குநர்: சுதா கொங்கரா (இறுதிச்சுற்று)
.சிறந்த கதையாசிரியர்: மோகன் ராஜா (தனி ஒருவன்)
.சிறந்த உரையாடலாசிரியர்: இரா.சரவணன் (கத்துக்குட்டி)
.சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (உத்தம வில்லன்/ பாபநாசம்)
.சிறந்தப் பாடலாசிரியர்: விவேக் (36 வயதினிலே),
.சிறந்த பின்னணிப் பாடகர்: கானா பாலா (வை ராஜா வை)
.சிறந்த பின்னணிப் பாடகி: கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)
.சிறந்த ஒளிப்பதிவாளர்: ராம்ஜி (தனி ஒருவன்)
.சிறந்த ஒலிப்பதிவாளர்: 1) ஏ.எல்.துக்காராம் 2) ஜெ.மஹேச்வரன் (தாக்க தாக்க)
.சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் (எடிட்டர்): கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)
.சிறந்த கலை இயக்குநர் (ஆர்ட் டைரக்டர்): பிரபாகரன் (பசங்க 2)
.சிறந்த சண்டைப் பயிற்சியாளர்: ரமேஷ் (உத்தம வில்லன்)
.சிறந்த நடன ஆசிரியர்: பிருந்தா (தனி ஒருவன்)
.சிறந்த ஒப்பனைக் கலைஞர்: சபரி கிரீஷன் (36 வயதினிலே/ இறுதிச்சுற்று)
.சிறந்த தையற் கலைஞர்: வாசுகி பாஸ்கர் (மாயா)
.சிறந்த பின்னணிக்குரல்: (ஆண்) கௌதம் குமார் (36 வயதினிலே)
.சிறந்த பின்னணிக்குரல்: (பெண்) ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)
மேலும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் விவரம் பின் வருமாறு:
.சிறந்த இயக்குநர்: கே.மோகன் குமார் (புர்ரா)
.சிறந்த ஒளிப்பதிவாளர்: விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே)
.சிறந்த ஒலிப்பதிவாளர்: வி.சதிஷ் (கண்ணா மூச்சாலே)
.சிறந்த படத்தொகுப்பாளர்: ஏ.முரளி (பறை)
.சிறந்த படம் பதனிடுவர்: வி.சந்தோஷ்குமார் (கிளிக்)
இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விழாவிற்கு தலைமையேற்று விருதாளர்களுக்குத் தங்கப்பதக்கம், காசோலை, நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
டீ குடிக்கச் சென்ற பாகன்கள்… லாரியில் இருந்து இறங்கி சென்ற யானை!
ஆண்ட்ரியாவின் ஆக்சன் படம் எப்போது ரிலீஸ்?