பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (மார்ச் 5) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ளது ராமேஸ்வரம் கபே. இங்கு கடந்த 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறியதில் பெண்கள் உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே வெடிகுண்டு கொண்டு வந்த மர்மநபர் தொடர்புடைய சிசிடிவி காட்சிகள் வெளியானது. எனினும் யார் அவர்? இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்த பயங்கரவாத அமைப்பு உள்ளது? என்ற கேள்விகள் எழுந்தது.
மேலும் இந்த வழக்கினை நேற்று தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ) கர்நாடக மாநில உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது.
இந்த நிலையில் சென்னை மண்ணடி, முத்தையால் பேட்டை உள்ளிட்ட இடங்களிலும், ராமநாதபுரத்தில் கீழக்கரையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு தவிர 7 மாநிலங்களிலும் சோதனை நடத்தி வரும் என்.ஐ.ஏ அதிகாரிகள், சென்னை முத்தையால் பேட்டையைச் சேர்ந்த ஹசன் அலி உள்பட 5 பேரை அழைத்துச் சென்று தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Video : சிக்ஸர் அடித்து கார் கண்ணாடியை உடைத்த ஆர்.சி.பி வீராங்கனை!
சிறைச்சாலைகள் தகர்ப்பு; 4,000 கைதிகள் தப்பியோட்டம்!