‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான ‘இங்க நான் தான் கிங்கு’ பர்ஸ்ட் லுக்கினை உலகநாயகன் கமல்ஹாசன் இன்று (பிப்ரவரி 28) வெளியிட்டார்.
இதில் சந்தானத்தின் ஜோடியாக அறிமுக நாயகி பிரியாலயா நடிக்க, முக்கிய வேடங்களில் தம்பி ராமையா, முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் மனோபாலாவும் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஆனந்த் நாராயணன் இயக்கியிருக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தினை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இமான் இசையில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற கோடை விடுமுறையில், திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
-ராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Video: ‘வணங்கான்’ ஷூட்டிங்ல என்ன அடிச்சாரு… ஓபனாக பேசிய ‘பிரேமலு’ நடிகை!
“மாநில அரசின் தடைகளைத் தாண்டி வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றம்”: மோடி