வருகின்ற கோடை விடுமுறையை பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படங்கள் குறிவைத்து இருப்பதாக தெரிகிறது.
இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்கள் எதுவும் தமிழ் சினிமாவிற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இதனால் ரீ-ரிலீஸ் படங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மறுபுறம் சின்ன பட்ஜெட்டில் உருவான கேரளா படங்கள் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீசை அடித்து நொறுக்கி வருகின்றன. இதனால் தமிழில் அடுத்து ஒருசில பெரிய படங்கள் வெளியானால் தான், ரசிகர்களை மீண்டும் திரைக்கு வரவழைக்க முடியும் என்னும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கிடையில் 2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலும் வருவதால், ரிலீஸ் தேதியை கவனமாக முடிவு செய்ய வேண்டிய நிலையில் தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் கோடை விடுமுறையில் பெரிய படங்கள் சில வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 26-ம் தேதி விஷாலின் ரத்னம் வெளியாகவிருக்கிறது.
மே மாதத்தில் விக்ரமின் ‘தங்கலான்’, தனுஷின் ‘ராயன்’, கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. இந்த படங்களுடன் வளர்ந்து வரும் இளம்நடிகரான கவினின் ‘ஸ்டார்’ திரைப்படமும் வெளியாகிறதாம்.
கதையின் மேலுள்ள நம்பிக்கையால் பெரிய படங்களுடன் வெளியிடும் முடிவினை படக்குழு எடுத்துள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மீண்டும் நாகை, திருப்பூரில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட்
கோவையை விட்டுக்கொடுத்த மார்க்சிஸ்ட்: மதுரை, திண்டுக்கல்லில் போட்டி!