lokesh kanagaraj prabhas

Lokesh Kanagaraj: ‘ரியல் வெறித்தனம்’ டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் லோகேஷ்

சினிமா

தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ், ஐந்து படங்களை மட்டுமே இயக்கி ‘தி மோஸ்ட் வான்டட் இயக்குநர்’ என்ற உச்சத்தை தொட்டுள்ளார்.

அனைவரும் ரசிக்கும் வகையிலான திரைக்கதை, தமிழில் இதுவரை பெரிதாக முயற்சிக்காத யுனிவர்ஸ் கான்செப்ட்டை லோகேஷ் கையில் எடுத்தது தான் இதற்கு காரணம்.

அதோடு ‘கைதி’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களை LCU (Lokesh Cinematic Universe) கான்செப்ட்டிற்குள் கொண்டு வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

கடைசியாக இவர் இயக்கிய ‘லியோ’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்திருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில், அப்படம் 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.

இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 171 வது படத்தை இயக்க லோகேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

தற்போது அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (மார்ச் 14) லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள்.

இதனையொட்டி பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரை போட்டிபோட்டு சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு இடையில் ஒரு சூப்பரான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

நடிகர் பிரபாஸின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது தான் அது. முன்னதாக ராம்சரண் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது.

lokesh kanagaraj prabhas

ஆனால் அதுகுறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது பிரபாஸ் – லோகேஷ் கூட்டணியில் உருவாக உள்ள இந்த புதிய படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாம்.

KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

‘வேட்டையன்’ படத்திற்கு பிறகு ‘தலைவர் 171’  படப்பிடிப்பு தொடங்குகிறது. இதையடுத்து  ‘கைதி 2’ திரைப்படத்தை இயக்க உள்ளதாக லோகேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

மேலும் ‘கைதி 2’ வெளியாவதற்கு முன்பே LCU குறித்த ஒரு குறும்படத்தை வெளியிடப் போவதாகவும் கூறியிருந்தார்.

‘கைதி 2’, ‘ரோலக்ஸ்’ படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் படத்தை  லோகேஷ் இயக்கப் போகிறாராம்.

இது லோகேஷின் 9-வது படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் லோகேஷின் 10 வது படமாக ‘விக்ரம் 2’ படம் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. lokesh kanagaraj to be direct prabhas

lokesh kanagaraj prabhas

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி விட்டதால் ‘லியோ 2’ வெளியாகுமா? இல்லையா? என்பது மட்டும் இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. lokesh kanagaraj to be direct prabhas

இதற்கு நடுவில் இந்திய திரை உலகிலேயே இப்படி ஒரு மாஸ் லைன்-அப் உடன் தயாராக இருக்கும் ஒரே இயக்குநர் லோகேஷ் தான் என, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

-கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு… உச்ச நீதிமன்றத்தில் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!

Jyothika: ரூபாய் 100 கோடியை வசூல் செய்தது ‘சைத்தான்’

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *