நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (மார்ச் 12) உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் 10 தொகுதிகள், சிபிஐ, சிபிஎம், விசிக தலா 2, மதிமுக. ஐயூஎம்எல், கொமதேக தலா 1, மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்தான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடுவது என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தத் தொகுதிகளை வச்சிக்கங்க… இந்தத் தொகுதிகளைக் கொடுங்க… திமுக-காங்கிரஸ் கசமுசா!
மகளிர் உரிமைத் தொகை பிச்சையா? குவியும் கண்டனம்- குஷ்பு விளக்கம்!