’பொன்னியின் செல்வன்’ வசூல் வேட்டைக்கு தமிழக அரசு இயந்திரமும், ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான உதயநிதி ஸ்டாலினும் முக்கிய பங்கு வகித்துள்ளனர் என்கிறார்கள் சினிமா தியேட்டர்கள் உரிமையாளர்கள் வட்டாரத்தில்.
“ரஜினிகாந்த் நடிப்பில் 2007ல் வெளியான ’சிவாஜி’ படம் தொடங்கி இன்று வரை முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளியான எல்லா படங்களின் வசூல்,
சாதனை நிகழ்வுகள் எல்லாமே சமபல போட்டியாளர்கள் இன்றி கட்டமைக்கப்பட்டு பெற்ற வெற்றிகள்தான்.
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தியேட்டர் கட்டண கொள்ளையை கட்டுப்படுத்தவோ, அல்லது ஒழுங்குபடுத்தவோ முயற்சி எடுத்தது இல்லை.
அதனால்தான் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அதிகாலை காட்சி, அதிகபட்ச டிக்கெட் கட்டணம் தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் நடைமுறையில் இருக்கிறது.
ஆன்லைன் முன்பதிவிற்கே அதிகபட்ச டிக்கெட் கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க முடிகிறது.
’பொன்னியின் செல்வன்’ டிக்கெட் என்ன விலைக்கு விற்கப்பட வேண்டும் என்பதை படத்தின் விநியோகஸ்தரே தீர்மானிக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்திற்கான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலையை செய்து கொடுத்தது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம்தான்.
இப்படத்துக்கான தேவை அதிகம் இருப்பதால் தமிழ்நாடு முழுவதும் A,B நிலைகளில் உள்ள திரையரங்குகளில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என ரெட் ஜெயண்ட் நிறுவனம் கறாராக கூறியிருக்கிறது.
சென்னை போன்ற நகரங்களில் மூன்று வகை, இரண்டு வகையான டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயித்து இருந்தாலும் எல்லா டிக்கெட்டுகளும் ஒரே விலையில்தான் விற்பனை செய்யப்படுகிறது.
அரசின் நிர்ணயப்படி 110 ரூபாய்க்கான டிக்கெட்டும், அதற்கு குறைவான டிக்கெட்டுகளும் ஒரே விலையில் அதாவது அதிக விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இப்படி கிடைக்கும் வசூலைதான் தமிழ் சினிமாவில் சாதனையாக கொண்டாடி வருகின்றனர் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
அநியாய கட்டணம் என்றாலும் பொன்னியின் செல்வன் படத்தை ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தை தமிழர்களிடம் அழுத்தமாக பதிவாக திட்டமிட்ட புரமோஷன் செய்த ‘பொன்னியின் செல்வன்’ படக்குழு முழுமையான வெற்றியை முதல் வாரத்தில் பெற்றிருக்கிறது.
தமிழர்கள் அடர்த்தியாக வாழும் நாடுகளில், தமிழகத்தில் மிகப்பெரும் வசூல் வேட்டையை முதல் வாரம் போன்று இல்லை என்றாலும் 80% வசூல் இரண்டாவது, மூன்றாவது வாரங்களிலும் நடத்தும்.
அதன் காரணமாக தமிழ்நாட்டில் அதிகபட்ச வருவாயை தயாரிப்பாளருக்கு (சுமார் 125 கோடி ரூபாய்) பெற்றுத்தரும் முதல்படமாக பொன்னியின் செல்வன் இருக்கும்.
தமிழ் மொழி பேசாத பிற மொழி பேசும் மாநிலங்களில் பாகுபலி-2, கேசிஎஃப், புஷ்பா, விக்ரம் போன்று வசூல் சாதனைகளை நெருங்க முடியாது சராசரி மொழி மாற்று படத்திற்குரிய வசூலை மட்டுமே பெற்றுள்ளது ‘பொன்னியின் செல்வன்’ வெற்றிக்கும், வருவாய்க்கும் தமிழர்கள் மட்டுமே காரணமாக இருக்கிறார்கள்.
இராமானுஜம்
சீமான் பிளேலிஸ்டில் மல்லிப்பூ பாடல்!
பொன்னியின் செல்வன்: வசூல் பொங்கி வழியும் பின்னணி!
பொன்னியின் செல்வனுக்கு எதிராக தொடர்ந்து நெகட்டிவ் செய்தியை மட்டுமே பதிவு செய்து வருகிறீர்கள் ஏன்
Did you see Ramanujam recent interviews, he’s been hatred to Maniratnam, so that he is always publishing negative news. he can’t digest the Real Blockbuster Hit of this Year “Ponniyin Selvan 1”