விஜய்யின் ‘வாரசுடு’ திரைப்படம் தெலுங்கில் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு இன்று நடைபெற்ற ‘வாரசுடு’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் 66-வது திரைப்படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் இவர், தமிழில் தயாரித்துள்ள முதல் படம் இதுவாகும்.
இப்படத்தில் விஜய்யுடன் சரத்குமார், ஷாம், விடிவி கணேஷ், சதீஷ், ராஷ்மிகா, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
வாரிசு திரைப்படம் வருகிற ஜனவரி 11 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்கான ரிலீஸ் பணிகள் ஒருபக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தெலுங்கில் ’வாரசுடு’ என்கிற பெயரில் வெளியிட உள்ளனர்.
அங்கு சிரஞ்சீவியின் வால்டர் வீரைய்யா மற்றும் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய படங்களுக்கு போட்டியாக இப்படம் ரிலீசாக உள்ளது.

முதலில் இப்படத்தை தெலுங்கிலும் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக கூறப்பட்டது.
ஆனால் ரிலீசுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், வாரசுடு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி வாரசுடு திரைப்படம் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் திட்டமிட்டபடி ஜனவரி 11 ஆம் தேதி வாரிசு படம் ரிலீசாகும் என்பதையும் உறுதிபட தெரிவித்துள்ளது படக்குழு.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“வெளியேறு வெளியேறு ஆளுநரே வெளியேறு” – பேரவையில் அமளி!
பொங்கல் பரிசு: இன்று முதல் விநியோகம்! டோக்கன் இல்லாதவர்களுக்கு எப்போது ?