BiggbossTamil7 Day 42: வெளியேறிய ஐஷு… கதறிய நிக்ஸன்… இனி என்ன ஆகும்?

சினிமா

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் எந்தவொரு பண்டிகையும் கொண்டாடக் கூடியது தான் என்ற முன்னுரையோடு உள்ளே வந்த கமல் அகம் டிவி வழியே வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களுடன் உரையாடினார். தொடர்ந்து ஆர்ஜே பிராவோவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார். கலர்புல் உடையில் இருந்த ஹவுஸ்மேட்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள் கமலுக்கு சொன்னதுடன் ‘பத்தல பத்தல’ பாட்டுக்கு டான்ஸ் ஆடி கலக்கினர்.

தொடர்ந்து அவர்களுக்கு வீட்டில் இருந்து வந்த லெட்டரை அளித்த கமல் அவர்களை படித்து காட்ட சொல்ல அனைவரும் மிகவும் உணர்சிகரமான முகத்துடன் கடிதங்களை வாசித்தனர். கூல் சுரேஷ் படிக்கும் போதே கண்கலங்கி அழ ஆரம்பித்தார். சரவண விக்ரம்க்கு வந்த கடிதத்தில் இந்த வாய்ப்பை வீணடித்து விட வேண்டாம் என நல்லதொரு அறிவுரையை வழங்கி இருந்தனர்.

தன்னுடைய தந்தையை நினைத்து கானா பாலா தேம்பியழ உறவுகளை சம்பாதிச்சுக்க முடியும் என்று தேவையான அறிவுரையை சொன்ன கமல் இந்த வார கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடக்க போவதாக அறிவித்து பிரேக்கில் சென்றார். கேப்டன் பதவிக்கு தங்களுக்கு பிடித்தவர்களை ஹவுஸ்மேட்ஸ் நாமினேட் செய்தனர். பெரும்பாலான நபர்கள் ஜோவிகா, ஐஷு, தினேஷை தேர்வு செய்தனர்.

டாஸ்க் முடிவில் தினேஷ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த கமல் கடந்த வார கேப்டன்ஷிப் குறித்து ஹவுஸ்மேட்ஸிடம் கருத்து கேட்டார். மாயாவின் கேப்டன்ஷிப் குறித்து பெரும்பாலான போட்டியாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியதை பார்க்க முடிந்தது. இவ்வளவுக்கும் காரணம் சரவண விக்ரம் டாஸ்க் குறித்து ஸ்மால்பாஸ் போட்டியாளர்கள் வருவதற்குள் படித்தது தான் காரணம் என விஷ்ணு குற்றஞ்சாட்ட அதற்கு ஒரு சுமாரான பதிலை சரவண விக்ரம் கொடுத்தார்.

ஸ்மால் பாஸ் வீட்டினர் தொடர்ந்து மாயா மீது குற்றச்சாட்டுகளை வைத்தனர். தனிப்பட்ட விரோதம் காரணமாக மாயா எங்கள் வீட்டை ஒதுக்கி வைத்து விட்டார் என்பதே அவர்களே முதன்மை காரணமாக இருந்தது. குறிப்பாக என்னையும், விசித்ராவையும் ஒதுக்கி வைத்தார் என நேரடியாக கமலிடம் தெரிவித்தார் அர்ச்சனா.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மாயா ஒரு மாதிரி மழுப்பலாக விளக்கமளிக்க, அன்பே சிவம் படத்தில் இருந்து உதாரணம் எல்லாம் சொல்லி மாயாவின் தவறை சுட்டிக்காட்டினார் கமல். பின்னர் நீங்கள் ஒரு சீனியர் என்பதை நிரூபிக்கும் படி நடந்து கொள்ளுங்கள் என விசித்ராவுக்கு அறிவுரை வழங்கிய கமல் நேராக நாமினேஷனுக்கு வந்தார்.

நாம் முன்னரே சொன்னது போல ஐஷுவின் பெயர் அதில் இருந்தது அவரின் தோழிகள் அழுக, ஐஷு இதை ஒரு மாதிரியாக கையாண்டார். தன்னுடைய இரண்டு காயின்களில் ஒன்றை ஜோவிகாவிற்கும், மற்றொன்றை நிக்சனுக்கும் அளித்தார். நல்ல பிரெண்ட் என்ற மேற்கோளுடன் நிக்சனுக்கு, ஐஷு காயின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

’எல்லாரும் நல்லா பாத்துக்கிட்டீங்க.. சுரேஷ், விசித்ரா என்று குறிப்பிட்ட அவர் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்’ என்று சொன்னது உருக்கமாக இருந்தது. அர்ச்சனாவிடமும் மன்னிப்பு கேட்டார். முன்னரே சொன்னது போல ஐஷு தனியாக இந்த விளையாட்டை ஆடி இருந்தால் கண்டிப்பாக பைனலுக்கு சென்று இருப்பார். ’வெளில போயாச்சும் சுயபுத்தியோட இரு’ என கூல் சுரேஷ், ஐஷுவுக்கு அறிவுரை சொன்னார்.

என்னை காரணம் காட்டி அவளை வெளியேற்றி விட்டனர் என நிக்ஸன், ஐஷு குறித்து உருக்கமாக அழுது புலம்பினார். கமலிடம் மேடையில் ஐஷு பேசியபோது எங்கே தவறு நடந்தது என கமல் கேட்க நான் மலையாளி என்பதால் கம்யூனிகேஷன் பிரச்சினை இருந்தது. சில நேரங்களில் என்னால் சூழ்நிலையை கையாள முடியவில்லை என்று ஒத்து கொண்டார்.

தொடர்ந்து அவரின் பயண வீடியோ ஒளிபரப்பானது. அதில் ஐஷுவின் ஆரம்பம் ஜாலியாக ஸ்டார்ட் ஆகி பின்னர் எமோஷனலாக முடிந்தது. வீடியோவில் பாதிக்கு மேல் நிக்ஸன் தான் இருந்தார். தொடர்ந்து தன்னுடைய நண்பர்களிடம் விடைபெற்ற அவர் எமோஷனல் மனநிலையுடன் வெளியேறினார்.

இனிமேல் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பது தான் முக்கியம். இதில் இருந்து தேவையான பாடங்களை எடுத்து செல்லுங்கள் என அவருக்கு கமல் விடை கொடுத்தார்.

பின்னர் போட்டியாளர்களிடம் பேசிய கமல் பிக்பாஸ் ஷோவாக இருக்கும் இந்த நிகழ்ச்சியை பீப் ஷோவாக மாற்றி விடாதீர்கள் என வேண்டுகோள் விடுத்து அனைவரிடமும் இருந்து விடைபெற்றார். நிக்ஸன், மாயா, பூர்ணிமா ஆகியோரால் ஐஷு வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் குறித்து அதிகம் பேசிக்கொண்டு இருந்ததை பார்க்க முடிந்தது.

ஐஷு குறித்து போட்டியாளர்கள் தங்களுடைய கருத்துகளை சொல்வது போல நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. தினேஷ் இந்த வாரம் கேப்டன் ஆகி இருப்பதால் வீட்டில் அமைதி நிலவுமா? இல்லை மீண்டும் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் ஆக பிரிந்து சண்டைக்கோழிகளாக சிலிர்த்து கொள்வார்களா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

நெதர்லாந்துக்கு எதிராக 9 பவுலர்கள் பந்துவீசியது ஏன்?: ரோகித் விளக்கம்!

தியேட்டருக்குள் வெடி… சல்மான் ரசிகர்கள் அலப்பறை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *