விஷாலின் “ரத்னம்” படத்தின் புத்தாண்டு ஸ்பெஷல் அப்டேட்!
நடிகர் விஷால் – இயக்குனர் ஹரி கூட்டணியில் வெளியான தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. தற்போது மீண்டும் இயக்குனர் ஹரி – நடிகர் விஷால் கூட்டணியில், விஷால் 34 படம் உருவாகி உள்ளது. விஷால் 34 படத்திற்கு ரத்னம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ரத்னம் படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க, யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஶ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரத்னம் படத்தின் ஃபர்ஸ்ட் ஷாட் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு நாளை ( ஜனவரி 1) காலை 7 மணிக்கு ரத்னம் படத்தின் முதல் பாடலான “வாராய் ரத்னம்” பாடலின் லிரிக்கல் வீடியோவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு ரத்னம் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புத்தம் புதியது என்று ஏதேனும் உள்ளதா? புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தளபதி 68 படத்தின் டைட்டில் இதோ!
புத்தாண்டில் 5 உறுதிமொழிகள்: மோடி வேண்டுகோள்!