Ilaiyaraaja Biopic: வசனம்லாம் தெறிக்குமே… திரைக்கதை யாரு எழுதுறான்னு பாருங்க!

Published On:

| By Manjula

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு திரைக்கதை எழுதப்போவது யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.

இசைஞானி, இசைக்கடவுள் என உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று பர்ஸ்ட் லுக்கோடு வெளியானது.

படத்தின் பூஜையில் நாயகன் தனுஷ், இசையமைப்பாளர் இளையராஜா, உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். படத்தினை ‘கேப்டன் மில்லர்’ புகழ் அருண் மாதேஸ்வரன் இயக்க, இளையராஜாவே இசையமைக்கிறார்.

அருண் மாதேஸ்வரன் இளம் இயக்குநர் என்பதால் படத்தினை அவர் எப்படி இயக்கப்போகிறார்? என்ற கேள்வியும் அதுதொடர்பான விவாதங்களும், சமூக வலைதளங்களில் களைகட்டி வருகின்றன.

Ajith Kumar: ரொம்ப நல்லா இருக்கு… வைரலாகும் பிரியாணி வீடியோ!

இந்தநிலையில் தற்போது இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது இப்படத்திற்கான திரைக்கதையை உலகநாயகன் கமல்ஹாசன் எழுதுகிறார் என்பது தான் அது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கமல் வெளியிட்டு இருக்கிறார். இளையராஜா-கமல் இருவரின் நட்பு ஊரறிந்தது என்பதால், திரைக்கதையில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

GOLD RATE: உச்சம் தொட்டது தங்கம்… விலையை கேட்டாலே தலையை சுத்துது!

அதோடு இந்த படத்தில் சிறப்பு தோற்றங்களில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் நடிக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மொத்தத்தில் இளையராஜா வாழ்க்கை வரலாற்று படம் தற்போது இந்தியளவில், மிகப்பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி

ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்… களைகட்டிய திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel