சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மின்சார ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே இன்று (ஏப்ரல் 29) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலூரில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பணிக்கு வந்து செல்வோரின் வசதிக்காக காலை 6 மணிக்கு வேலூரில் இருந்து மின்சார ரயில் இயக்கப்படுகிறது.
இந்த மின்சார ரயில் காலை 9.5௦ மணிக்கு சென்னை வந்தடையும். இந்த ரயில் தினசரி இயக்கப்படும் மின்சார ரயில் ஆகும்.
இந்த ரயில் மீண்டும் சென்னை கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை இரவு 9.40 மணிக்கு வந்து சேரும்.
இந்நிலையில், ரயில் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று வேலூர் வரை சென்ற இந்த மின்சார ரயில் சேவையை திருவண்ணாமலை வரை நீட்டித்து தெற்கு ரயில்வே இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மே 2ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், போளூர், மடிமங்கலம், ஆரணி ரோடு, சேடராம்பட்டு, ஒன்னுபுரம், கண்ணமங்கலம், பெண்ணத்தூர் ரயில் நிலையங்களில் நின்று வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திற்கு 5.40 மணி அளவில் வந்து சேரும் என்ற வகையில் தெற்கு ரயில்வே சார்பாக அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அஜித்தின் விடாமுயற்சி தாமதம்: என்னதான் காரணம்?
நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை? நாளை அறிவிப்பு!