ED opposes bail to Senthil Balaji

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க ED எதிர்ப்பு!

அரசியல்

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை இன்று (ஏப்ரல் 29) எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை மே 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது காவல்துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

இதன்படி, சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்த அமலாக்கத் துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த நிலையில், இந்த வழக்கில் நீண்ட காலமாக சிறையில் இருப்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 29) அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும். செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது.

அவ்வாறு ஜாமீன் வழங்கினால், அவர் ஆதாரங்களை அழிக்க வாய்ப்புகள் உள்ளது. அமைச்சர் பதவியை செந்தில்பாலாஜி ராஜினாமா செய்தபோதிலும், தற்போதும் அவர் எம்.எல்.ஏ.வாக உள்ளதால் அதிகாரமிக்க நபராக உள்ளார். இதன் மூலம், சாட்சியங்களை தடுக்க வாய்ப்புள்ளது. எனவே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “320 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறேன். ஆனால் வேண்டுமென்றே இந்த வழக்கில் தாமதம் செய்ய வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் பதில் மனுவை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கிறது. தனிநபர்களுக்குள் நடந்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தை நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மோசடியாக கட்டமைக்கின்றனர்” என வாதிட்டார்.

தாமதமாக பதில் மனு தாக்கல் செய்ததற்காக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு மன்னிப்பு கோரியது.

இதனையடுத்து பதில் மனுவை நாங்கள் இன்னமும் படித்து பார்க்கவில்லை. எனவே வழக்கின் விசாரணையை மே 6ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

வரும் மே 18ஆம் தேதியிலிருந்து ஜூலை 7ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்திற்கு கோடை கோடை விடுமுறை ஆகும்.

எனவே மே 6ஆம் தேதி நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் பிறகு ஒன்றரை மாதம் செந்தில் பாலாஜி காத்திருக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Gold Rate: சற்று குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

T20 WorldCup : 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது நியூசிலாந்து!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க ED எதிர்ப்பு!

  1. இந்த மாதிரி மந்திரிகள் மீதான நடவடிக்கைகள் தான் நீதிமன்றம் மீது விட்டு விட முடியாத நம்பிக்கை மீதம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *