ஏற்காடு மலைபாதையில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கி நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் ஏற்காடு, ஊட்டி, கொடைக்கானல் என மலை பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி இன்று (ஏப்ரல் 30) ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
#சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
செய்தியாளர் – விஜயகுமார் pic.twitter.com/BAXqxwpSuI
— AIR News Chennai (@airnews_Chennai) April 30, 2024
மலைப்பாதையில் உள்ள பதினோராவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது, பள்ளத்தில் கவிழ்ந்து நின்றது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
பிரியா
கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவு : ஒப்புக்கொண்ட தயாரிப்பு நிறுவனம் – என்ன பாதிப்பு ஏற்படும்?
ரஜினியை கலாய்த்தாரா வெங்கட்பிரபு?