Ajith Kumar: ரொம்ப நல்லா இருக்கு… வைரலாகும் பிரியாணி வீடியோ!

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் தற்போது நண்பர்களுடன் மத்திய பிரதேசத்துக்கு பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

‘விடாமுயற்சி’ நட்பால் நடிகர் ஆரவும் இந்த வட்டத்தில் இணைய, இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக அஜித் தனியாக பிளாக் ஜெர்கின் அணிந்து ரிலாக்ஸாக அமர்ந்திருக்கும் புகைப்படம், நண்பர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் மற்றும் அவர்கள் சென்றுள்ள பைக்குகளின் புகைப்படங்கள் ஆகியவை இணையத்தை வெகுவாக ஆக்கிரமித்துள்ளன.

இதைப்பார்த்த ரசிகர்கள் ”எதைப்பற்றியும் கவலைப்படாமல் இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் வாழ வேண்டும். பணம், புகழ் அனைத்தையும் விட மன நிம்மதி தான் முக்கியம்” என அஜித்தை வெகுவாக புகழ்ந்து வருகின்றனர்.

GOLD RATE: உச்சம் தொட்டது தங்கம்… விலையை கேட்டாலே தலையை சுத்துது!

இந்தநிலையில் அஜித் நண்பர்களுக்காக பிரியாணி சமைத்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் அஜித் அடிப்படையில் ஆரம்பித்து கடைசியாக இறக்குவது வரை பார்த்துப்பார்த்து சமைக்கிறார்.

வீடியோ பார்க்கும்போதே அந்த பிரியாணியை சாப்பிட வேண்டும் என ஆசையாக இருக்கிறது. அந்தளவுக்கு பிரியாணி நல்ல ரிச் லுக்கில் நம்மை ஈர்க்கிறது.

சாதாரணமாக அஜித்தின் ஒற்றை புகைப்படம் வந்தாலே சமூக வலைதளங்களை தெறிக்க விடும் ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு சும்மா இருப்பார்களா ? வழக்கம் போலவே பிரியாணி வீடியோவையும் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர். இதனால் #Ajith என்னும் ஹேஷ்டேக் இந்தியளவில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

அஜித் தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி

ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்… களைகட்டிய திருவாரூர் ஆழித்தேரோட்டம்!

5 முக்கிய கோரிக்கைகளுடன்… திமுகவுக்கு கருணாஸ் கட்சி ஆதரவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *