சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு இன்று (மார்ச் 21) ரூபாய் 760 அதிகரித்து ரூ.49,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 95 அதிகரித்து ரூ.6,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.832 அதிகரித்து ரூபாய் 54,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 104 அதிகரித்து ரூ.6,802-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியைப் பொறுத்தவரையில் 1.50 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 81,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று லேசாக உயர்ந்த தங்கம் இன்று ஒரேயடியாக உயர்ந்து ரூபாய் 5௦,௦௦௦ எட்டிப் பிடித்துள்ளது. வெள்ளியும் கிராமிற்கு 1.5௦ ரூபாய் அதிகரித்து இருக்கிறது.
தங்கம் விலை ஏற்றத்தினை பார்க்கும்போது இந்த சூழலில் நகைக்கடை பக்கம் போகாமல் இருப்பது தான், நம்முடைய இதயத்திற்கு நல்லது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
5 முக்கிய கோரிக்கைகளுடன்… திமுகவுக்கு கருணாஸ் கட்சி ஆதரவு!
ஜி ஸ்கொயர்… வேல்ஸ் பல்கலையில் வருமான வரித்துறை சோதனை!