மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் மோதிக்கொண்டதில் இளைஞர் ஒருவர் கொலை செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ஏப்ரல் 12ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று (ஏப்ரல் 23) நடைபெற்றது.
சித்திரை திருவிழா நடந்த பகுதியில் இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதில் மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிவகங்கை திருபாச்சேத்தியைச் சேர்ந்த சோனை என்பவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியதில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்ட சோனை என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், கார்த்திக் என்பவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கத்திக்குத்து சம்பவம் குறித்து மதிச்சயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக கொலை நடத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Gold Rate: அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
”அரசியல் சாசனம் சீர்குலைக்கப்படுகிறது” : பாஜக வேட்பாளரின் வெற்றிக்கு காங்கிரஸ் கண்டனம்!