ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்கள் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று (மார்ச் 21) காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே அமலாக்கத்துறை அங்கு நடத்திய சோதனையில் கைப்பற்றிய ஆவணங்களை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்திருந்தது.
அதன் அடிப்படையில் தான் தற்போது சென்னை ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், நீலாங்கரை, எழும்பூர், அடையாறு உள்ளிட்ட ஜி ஸ்கொயருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் இதே கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
’காந்தாரா சாப்டர் 1’ நாயகியாகும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்!
வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் பணி!
ஷங்கர் முன்னிலையில் ராம்சரண் 16வது படபூஜை… கேம் சேஞ்சர் என்னாச்சு?