ரன்பீர் சிங்கின் அசர வைக்கும் ‘அனிமல்’ ட்ரெய்லர்!

Published On:

| By Monisha

ranbeer singh in animal trailer

அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அனிமல்’. ranbeer singh in animal trailer

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் அனிமல் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அனிமல் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தின் மொத்த ரன் டைம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள் 23 வினாடிகள் & 16 ஃபிரேமஸ் என்று இயக்குனர் சந்தீப் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த படம் வரும் டிசம்பர் 01 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (நவம்பர் 23) இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

தனது தந்தை மீது வைத்துள்ள பாசத்திற்காக எதிரிகளை கொல்லும் மகன் (ரன்பீர் கபூர்), மகனை கிரிமினலாக பார்க்கும் தந்தை (அனில் கபூர்), தந்தை மீது வைத்துள்ள அளவு கடந்த பாசம் மகனை எப்படி ஓர் மிருகமாக மாற்றுகிறது,

இறுதியில் தனது தந்தையின் உயிரை எதிரிகளிடம் இருந்து ஹீரோ காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே அனிமல் படத்தின் ஒன் லைன்.

ரன்பீர் சிங்கின் நடிப்பு வெறித்தனம், ட்ரெய்லரின் ஒவ்வொரு ஃபிரேமிலும் ரன்பீர் சிங் மிரள வைக்கிறார். அனிமல் படம் ரத்தம் தெறிக்கும் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கிறது. ranbeer singh in animal trailer

அனிமல் படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அர்ஜுன் ரெட்டி படத்தைப் போலவே சந்தீப் ரெட்டியின் இந்த அனிமல் படமும் மிகப்பெரிய டிரெண்ட் செட்டர் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

காவல் நிலையத்தில் மன்சூர்… இன்றே ஆஜரானது ஏன்?

3 நாட்களுக்கு கனமழை: எந்தெந்த மாவட்டஙகளில்?

Exclusive: அமீர் விஷயத்துல ஞானவேல் ராஜா சொல்றது எல்லாமே பொய்… தயாரிப்பாளர் கணேஷ் ரகு பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel