விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

புதுக்கோட்டையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (மார்ச் 21) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் குட்கா ஊழல் முறைகேட்டில் சிக்கி உள்ள நிலையில் அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அவரது வீட்டில் ஏற்கெனவே வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில், சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக இன்று காலை 3 வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருவது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் விஜயபாஸ்கர் வீடு தவிர சென்னை தரமணியில் உள்ள ஐ.டி நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி வாரியத்தில் பணி!

ஷங்கர் முன்னிலையில் ராம்சரண் 16வது படபூஜை… கேம் சேஞ்சர் என்னாச்சு?

குரூப் 1 நேர்முகத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts