அரசாங்கத்தை மாற்றிய பாமக: அப்டேட் குமாரு
நண்பர் ஒருத்தரோட இன்னைக்கு டீ கடைக்கு போயிருந்தேன். தேர்தல் பத்தி என்கிட்ட பேச்சுக்கொடுத்துக்கிட்டு இருந்தாப்ல…
”2024 நாடாளுமன்ற தேர்தல்ல தேசிய நலனே முக்கியம்னு கூட்டணி வச்ச நம்ம ராமதாஸ் ஐயா, தேர்தல் முடியறதுக்குள்ள அரசாங்கத்தையே மாத்திட்டாரு தெரியுமான்னு” கேட்டாப்ள…
”அது எப்படிங்க தேர்தல் முடியுறதுக்குள்ள அரசாங்கத்தை மாத்த முடியும்?”ன்னு கேட்டேன்.
”அட நீங்க வேற நண்பா…தருமபுரி வேட்பாளர் அரங்கத்தை மாத்தீட்டாங்கன்னு சொல்ல வந்தேன்”
அப்டியே பாத்து அவர ஒரு லுக்கு விட்டேன்… உடனே டீ காச குடுத்துட்டு அங்க இருந்து கிளம்பிட்டாரு…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
balebalu
ஏங்க MP சீட்டே தான் வேணுமா
MLA போஸ்ட் ரிசைன் பண்ணிட்டு வந்தவங்களுக்கெல்லாம் சீட் கொடுக்குறதில்ல
ச ப் பா ணி
உலக தண்ணீர் தினத்தை டாஸ்மாக்கில் கொண்டாடுகிறவர்களே அதிகம்
-சியர்ஸ்
நாகராஜா சோழன் MA MLA
விஜயாதாரணி மேடம் மைண்ட் voice ….
இதெல்லாம் நியாயமாரே
உள்ளூராட்டக்காரன்
நயினார்: எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ணனுமா?
ஆடு: தேவையில்ல, ஜெயிச்சதுக்கு அப்புறம் ராஜினாமா பண்ணா போதும்
அப்ப ஓகே, என் பேரை எழுதிக்கோங்க
balebalu
தர்ம யுத்தத்தில் ஆரம்பித்து ஒரே ஒரு சீட்டுடன்
சுயேச்சை சின்னத்தில் முடிந்தது
விமலிசம்
பைக்குக்கு டிடிஎஃப் வாசன்
சைக்கிளுக்கு ஜிகே வாசன்
Kirachand
பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் ஓபிஎஸ் போட்டி!
இரட்டை இலை சின்னம்தான் போச்சி… இப்
படி கவுரவத்தையும் இழந்துட்டாரே மனுஷன்…
https://twitter.com/i/status/1771052701608263918
நெல்லை அண்ணாச்சி
கெஜ்ரிவால் கைது…
காங்கிரஸ் bank account முடக்கம்…
# வினாச காலே விபரீத புத்தி ”
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஜிட்டல் திண்ணை: அன்புமணிக்கு வந்த அழுத்தம்… சௌமியா களமிறங்கிய பின்னணி!
“மோடி கண்ணில் தோல்வி பயம்” : திருச்சி பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு!