பலாப்பழத்த பிதுக்கிட்டாங்களே : அப்டேட் குமாரு

Published On:

| By christopher

update kumaru trending

இன்னைக்கு காலைல கறி வாங்க மார்க்கெட் போயிட்டு வர்ற வழில தள்ளுவண்டி காரரு பலாப்பழம் வித்துட்டு இருந்தாரு…

போகும்போது பாத்தேன்… நல்லாதான் இருந்துச்சி… ஆனா கறி வாங்கிட்டு வரும் போது பாத்தா… சக்க தனியா, பழம் தனியா, கொட்ட தனியா பிரிச்சி போட்டிருந்தாங்க… பலாப்பழத்த அந்தளவுக்கு கந்தலா பிரிச்சி மேஞ்சிந்தாரு கடைக்காரரு..

அது விஷயமில்ல… ஆனா இந்த பலாப்பழத்த பாத்ததும் ஏனோ மண்டைல ஓபிஎஸ் ஞாபகத்துக்கு வந்துட்டாரு…

இந்த ஜூன் 4ஆம் தேதி எலெக்சன் ரிசல்ட் அறிவிக்கும் போது அவரோட நெலமையும் இப்படி இருக்குமோனு தோனுடுச்சி…

என்ன நடக்க போகுதோ…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க!

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் முதல் 100 நாளில் பெரிய முடிவு – பிரதமர் மோதி

# இதை பார்த்தா மீண்டும் ஆட்சிக்கு வர ஓட்டு கேட்கற மாதிரி தெரிலயே..

கடைநிலை ஊழியன்

டீ போட்டு ஓட்டு கேக்குறது, தோசை சுட்டு ஓட்டு கேக்குறது,

இஸ்திரி போட்டு ஓட்டு கேக்குறது.. இதுக்கு பதிலா

ஒரு அரை கிலோ கறி வாங்கிட்டு வந்து, பிரியாணி வச்சு கொடுக்கலாம்..

ஞாயிற்றுக்கிழமை சிறப்பா இருக்கும் !!

எனக்கொரு டவுட்டு!?

சூடும் சூடு சார்ந்த இடமும்

டூ வீலர் சீட்டு..

ခ། ᤌ ꪆ ᰈᮀ།‌‍‌͢ ????

Me : ஒரு பொண்ணைப் பார்த்த அந்த செகண்டே நம் மனசு சொல்லும், இவதாண்ட உன் பொண்டாட்டின்னு..

My Mind Voice : உனக்கு கல்யாணம் ஆகிப் போச்சு என்பதை மறந்து, தினமும் 5,6 பேரைப் பார்த்து உன் மனசு இப்படி அடிக்கடி சொல்லுதேடா…

ச ப் பா ணி

அடிக்கடி ஆன்லைன் வரக் கூடாதுனு நினைக்கும் போதெல்லாம்,

‘நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட’ என்கிறது மொபைல்போன்

இளநி

50 வருஷமா கோமால இருந்துட்டு இப்பதான் எழுந்திருச்சுருக்கானுக..

என்னாச்சு?!

கச்சத்தீவ காங்கிரஸ் காவு குடுத்துடுச்சாம்.

✒️Writer SJB✒️

சண்டே மட்டன் சமைக்காத உன் மேல் ஆத்திரம் அருவியா கொட்டுது..

நான் உன்ன திட்ட உனக்கு கோவம் வந்து எங்க காலையில செஞ்ச உப்புமாவை

மத்தியானமும் வச்சுவியோனு நினைக்கும் போது வந்த கோபம் தானா போயிடுது

balebalu

ஒன்னு 50 வருஷம் முன்னாடி நடந்ததை பேசுறாங்க இல்லைனா

50 வருஷம் கழிச்சு நாடு இப்படி இருக்கும் ன்னு பேசுறாங்க

இப்ப இருக்குற நிலைமை பத்தி பேச்சே காணோம் ????

#கச்சத்தீவு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லாக் ஆஃப்

டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியின் டபுள் டாஸ்க்… ஸ்டாலின் கொடுத்த பூஸ்ட்!

ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் : செல்லூர் ராஜூ சாபம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel