வாட்ஸ் அப் செயலியில் ’வியூ ஓன்ஸ்’ அம்சத்தைப் பயன்படுத்தி அனுப்பப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஸ்கீரின்ஷாட் மற்றும் ரெகார்ட் செய்ய முடியாது என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தள செயலிகளை இயக்கி வருகிறது.
இந்தியாவில் தற்போது 390 மில்லியன் மக்கள் வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் மட்டுமல்லாது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது, வீடியோ மற்றும் ஆடியோ கால் ஆகிய வசதிகள் அடங்கியுள்ளன.
இதில் தங்களது பயனர்களுக்காக சில மாற்றங்களையும் மெட்டா நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வாட்ஸ் அப்-பில் வியூ ஒன்ஸ் என்ற அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்தது. இதனைத் தனது வாடிக்கையாளர்களின் தகவல் பாதுகாப்பிற்காக செய்திருந்தது.
இந்த வியூ ஒன்ஸ் அம்சத்தின் மூலம் ஒருவர் அனுப்பும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை மற்றொருவர் ஒரு முறை மட்டுமே பார்வையிட முடியும்.
வழக்கமாக வாட்ஸ்அப் மூலம் ஒருவர் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பெறப்பட்ட நபரின் போனில் பதிவிறக்கம் செய்த பிறகு தானாகவே பதிவாகிவிடும்.
வியூ ஒன்ஸ் அம்சத்தின் மூலம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்தாலும் போனில் பதிவாகாது. ஆனால் இதனை, ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ரெகார்ட் செய்ய முடியும்.
இந்நிலையில் ”வாட்ஸ் அப் பீட்டா இன்ஃபோ” அறிக்கையின்படி மெட்டா வாட்ஸ்அப்-பில் ஒரு புது அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வியூ ஒன்ஸ் அம்சத்தைப் பயன்படுத்தி அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ரெகார்ட் செய்ய முடியாது.
ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முயன்றாலும் போன் ஸ்க்ரீன் முழுவதும் கருப்பாக மாறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பீட்டா வாட்ஸ் ஆப் செயலியைப் பதிவிறக்கம் செய்தவர்களுக்கு மட்டும் தான் செயல்படும் என்றும் மெட்டா தெரிவித்துள்ளது.
வியூ ஒன்ஸ் அம்சத்தைப் பயன்படுத்தாமல் அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எப்போதும் போல் மற்றவர்களால் ஸ்க்ரீன் ஷாட் மற்றும் ரெகார்ட் செய்யப்படும்.
மோனிஷா
தழகத்தில் மனு என்ற பெயரைக் கேட்டாலே அலர்ஜி: தமிழிசை
மீண்டும் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா