How many times a day is normal to urinate?

ஹெல்த் டிப்ஸ்: ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்?

டிரெண்டிங்

24 மணி நேரத்தில் காலையில் எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரையிலும் தண்ணீர் அல்லது திரவ உணவுகள் எடுத்துக்கொள்கிறோம். இந்த நிலையில் ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது என்ற சந்தேகம் எழலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதைவிட, சிறுநீரின் நிறம், சிறுநீர்ப் பையிலிருக்கும் சிறுநீர் முழுமையாக வெளியேறுகிறதா, குறுகிய இடைவெளியில் சிறுநீர் கழிக்கத் தோன்றுகிறதா என்கிற மூன்று விஷயங்களையும் பார்க்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களும் இயல்பாக இல்லையென்றால் ஏதாவது பிரச்சினை இருக்கலாம்.

தோராயமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு 5 முதல் 6 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு. இரவு தூக்கத்தின் நடுவே ஒருமுறை எழுந்து சிறுநீர் கழித்தால் அதுவும் இயல்பானதுதான்.

ஆண்களின் சிறுநீர்ப்பை பொதுவாக 300 மில்லி அளவு வரை சிறுநீரை தேக்கி வைக்கும். பெண்களால் ஆண்களைவிட சற்று அதிகமாக 400 மில்லி வரை தேக்கி வைக்க முடியும். அதற்கு மேல் சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட்டுவிடும். சிலர் ஒரு லிட்டர் சிறுநீரை தேக்கி வைத்திருந்து, ஒரே நேரத்தில் வெளியேற்றுவார்கள்.

இது ஆரோக்கியமற்ற பழக்கம். குறிப்பிட்ட இடைவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டும். அதே போல சிலருக்கு 20 – 30 மில்லி சிறுநீர் சேர்ந்ததுமே சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படும். இதுவும் இயல்பானது அல்ல என்பதால் இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

சீசனுக்கு ஏற்றாற்போல், நாம் வாழும் சூழலுக்கு ஏற்றாற்போல் சிறுநீர் கழிக்கும் தன்மை மாறும். ஏசி அறைகளில் வேலை பார்க்கும்போது அடிக்கடி தாகம் எடுக்காது. அதனால் சிறுநீர் கழிக்கும் உணர்வும் அவ்வளவாக ஏற்படாது. இதுபோன்ற வேலைகளில் இருப்பவர்கள் தாகம் எடுக்காவிட்டாலும் குறிப்பிட்ட இடைவெளிக்கு இடையில் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

நாம் அருந்தும் தண்ணீரின் நிறமும் வெளியேறும் சிறுநீரின் நிறமும் ஒரே நிறத்தில் இருந்தால் உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக்கொள்கிறோம் என்று புரிந்துகொள்ளலாம்.

சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் அது ரத்தமாகக்கூட இருக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்னையைக் கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் குடிக்கிற தண்ணீர் போதவில்லை என்று அர்த்தம். எனவே, அருந்தும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
வேறு ஏதேனும் நிறத்தில் சிறுநீர் இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் என்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். எப்படி சர்க்கரையில் நீர் பட்டால் அதை இழுத்துக்கொள்ளுமோ அதே போல ரத்தத்தில் சர்க்கரை இருந்தால் அதுவும் உடலிலுள்ள தண்ணீரை இழுத்துக்கொள்ளும். எனவே, சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும், வெளியேறும் சிறுநீரின் அளவும் அதிகமாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பாதை உள்ளிட்ட தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகம். எனவே, நோயின் காரணமாக மட்டும் சிறுநீர் வெளியேறுகிறதா அல்லது வேறு ஏதேனும் நோய்த்தொற்று இருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ள வேண்டும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, முழுமையாக சிறுநீர் வெளியேறவில்லை உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் சிறுநீரக மருத்துவரை அணுகி பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெயிலா? கோடை மழையா? – அப்டேட் குமாரு

எம்.எல்.ஏ ஆபிஸுக்குள் மதுபாட்டில்கள் : ஷாக்கான வானதி

ஏழை மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

’வெயிட் லாஸ்’ சிகிச்சையால் உயிரிழந்த இளைஞர் – மருத்துவமனையை மூட உத்தரவு!

+1
0
+1
0
+1
1
+1
3
+1
0
+1
3
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *