Update Kumaru January-7-2024

நம்ம மைண்ட் வேற அங்க போகுதே : அப்டேட் குமாரு

டிரெண்டிங்

அண்ணே, ‘ஒரு விஷயம் உண்மைன்னா அதை யாராலும் மறைக்கவோ மறக்கவோ முடியாது போல’னு கடைக்கு போன தம்பி கணேசன் திரும்பி வந்து திடீர்னு  தத்துவம் பேசிக்கிட்டு இருந்தான். Update Kumaru January-7-2024

என்னப்பா விஷயம்னு கேட்டா… ’இன்னைக்கு மதுரைல எடப்பாடி ’தவழ்ந்து தவழ்ந்து நான் முதலமைச்சர் ஆனேன்’னு சொல்லிருக்காரு… அவரு அரசியல்ல கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தத தான் அப்படி சொல்றாருனு மனசுக்கு தெரியுது.

ஆனா நம்ம மைண்ட்ல என்னவோ சசிகலா முன்னாடி அவரு தவழ்ந்து தவழ்ந்து போன காட்சிதான் வருது. அதான் உண்மைய மறக்க முடியலயேன்னு சொன்னேன்’னு சொல்லி முடிச்சான்.

அழகான தத்துவத்த அதிமுகவோட கனெக்ட் பண்ணி அவன் சொன்னது நல்லா இருந்தாலும், கடையில வாங்கிட்டு வர சொன்ன கொசுவத்திய மறந்துட்டு அவன் பேசுறத நெனச்சா நம்ம மைண்ட்ல வெறி ஏறுது… என்ன செய்ய?

நீங்க அப்டேட்ட பாருங்க!

தர்மஅடி தர்மலிங்கம்

பாஜகவுடன் இணைந்து செயல்படும் சூழல் நன்றாகவே உள்ளது! – ஓபிஎஸ்!

‘அதிமுக’வுடன் இணைந்து செயல்படும் சூழல் தான் உங்களுக்கு இனி இல்லாம போயிடுச்சே.?!

கடைநிலை ஊழியன்

எல்லாரும் Book Fair போயிட்டு புக் போட்டோ போடுறாங்க..

இது சரிப்பட்டு வராது.. படிக்கிறோமோ இல்லயோ, நம்மளும் நாலு புக் வாங்கி போட்டோ போட்டுற வேண்டியது தான்..

#ChennaiBookFair2024

Kirachand

‘முதலீடு’களுக்கு காரணம் “மோடிஜி”- தெலங்கானா ஆளுநர் தமிழிசை

அப்ப… தமிழக அரசு மீது அண்ணாமலை கூறும் அனைத்து ‘முறைகேடு’களுக்கும் மோடிஜிதான் காரணமுங்களா?

ℳsd இதயவன்

“அதிமுகவில் உள்ள பல பிரிவுகள் ஒன்று சேர்ந்தால் மட்டுமே தேர்தலில் வெற்றிபெற முடியும்” – ஓபிஎஸ்

வழக்கறிஞர் அணி விவசாய அணி ஐடிவிங் எல்லா பிரிவும் அதிமுகக்குள்ள தான் இருக்கு ஆனா இவரு தான் அதிமுகவுக்குள்ள இல்ல?!

Update Kumaru January-7-2024

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?

ஞாயித்துகிழமையானா இப்படி மாறி மாறி பாராட்டறதும் மத்த நாள்ல பிஞ்ச செருப்பால அடிச்சுக்கறதும் ஒரே கன்டெஸ்டன்ட்ஸா..?

#BigBoss7tamil

Update Kumaru January-7-2024

சரவணன். 𝓜

எப்போதும் சிரித்த முகத்துடன் இருங்கள்!

எதுக்கு.. அப்பத்தான் இளிச்சவாயன்னு தெரிஞ்சுக்கிட்டு எல்லோரும் ஏமாத்தறதுக்கா?

கடைநிலை ஊழியன்

girlfriend during yearend- டேய் அடுத்த வருஷம் வேலைல நல்லா focus பண்ணு. அப்ப தான் நல்ல position க்கு வர முடியும்

girlfriend this weekend- என்னடா பண்ற. வெளிய போலாமா

he- இல்ல டி.. கொஞ்சம் வேல இருக்கு.. நாளைக்குள்ள முடிக்கணும்

girlfriend- அப்ப என்னைய விட, வேல தான் உனக்கு முக்கியமா

Update Kumaru January-7-2024

சரித்திரன்

தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன்” -மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி!

சாய்ந்து சாய்ந்து சாங்ல வர்ற லைன்ஸ் மாதிரியே மேட்ச் ஆகுது EPS க்கு..

தவழ்ந்து தவழ்ந்து நீ CM ஆனபோது, அடடா… ஏஏஏஹே.. ஹே…

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”இந்தி பேசக்கூடாதா?”: பத்திரிகையாளரிடம் சீறிய விஜய் சேதுபதி

”பிரதமர் வேட்பாளர் தேவையில்லை” : எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி

Update Kumaru January-7-2024

+1
0
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *