இன்னைக்கு காலையில நண்பர் ஒருத்தர் கால் பண்ணாரு…
“என்ன நண்பா…காலையிலேயே கால் பண்ணிருக்கீங்கன்னு” கேட்டதுக்கு, “அட…கோடை மழை வெளுத்து வாங்குது. உங்களுக்கு என்ன தூக்கம்னு” கேட்டாப்ல…
உடனே நானும் ஆர்வத்துல முகத்தக் கூட கழுவாம வெளியே ஓடி போய் பார்த்தா சூரியன், “ஹாய்…இன்னைக்கும் உனக்கு இருக்குடின்னு” பல்ல காட்டுச்சு…
கடுப்புல கிளம்பி திரும்பவும் ரூமுக்கு போய் படுத்து தூங்கிட்டேன்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
பாக்டீரியா
தமிழகத்தில் “மழைக்கான” மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு – வானிலை ஆய்வு மையம்
சென்னை ~ நிஜமாதான் சொல்றியா..
ℳsd இதயவன்
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மனம் தளரக்கூடாது: ஜி.கே.வாசன் அறிவுரை ~
ஜூன் 4 ல் நாங்களும் தான் தோற்கபோறோம் நாங்க என்ன மனம் தளர்ந்தா
இருக்கோம்?!
ச ப் பா ணி
ஸ்விட்ச் ஆப் பன்னிட்டு போட்டால் போன் வேகமா வொர்க் ஆகும்.ஆனால் ஃபேன் வேகமா வொர்க் ஆகாது.
-கண்டுபிடிப்பு
குருநாதா
ஏம்மா சமைக்கிற போதெல்லாம் உன் புருஷன கூடவே நிக்க வைக்கிற?
குக் வித் கோமாளி மா
கடைநிலை ஊழியன்
ஆமா.. எதுக்கு டா watch ல 5 நிமிஷம் fast டா வச்சுருக்க..
என்னால தான் fast டா இருக்க முடியல.. சரி watch ‘சாவது fast டா இருக்கடுமே வச்சுருக்கேன்…
கோழியின் கிறுக்கல்!!
இன்றைய தேதியில் விசாரிப்புகளில், “கோவிஷீல்டா, கோவேக்ஸினா” என்பதும் சேர்ந்தே இருக்கின்றது!!
படிக்காதவன்™
இன்னும் 21 நாள் தான்
என்ன மாப்ள
எலெக்ஷன் ரிசல்ட்டுக்கா
இல்ல மாமா
அக்னி நட்சத்திரம் முடிய…
சரவணன். 𝓜
எலக்சன் கமிஷன் டூ டிவிட்டர் ~
கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு முடியற வரைக்கும் பாஜகவோட அந்த முஸ்லிம் மத வெறுப்பு வீடியோவை நீக்க சொல்ல மாட்டோம்.. வாக்குப்பதிவு முடிந்த பிறகு நீக்கலைன்னா எங்க நடவடிக்கை ரொம்ப உக்கிரமா இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்….
லாக் ஆஃப்
டிஜிட்டல் திண்ணை: தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? ஆளுநர் நடத்திய முக்கிய ஆலோசனை!
வெப்ப அலை… காரணம் என்ன? அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்! பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்