வெப்ப அலை வீசுவதற்கு முழுக்க முழுக்க மனிதர்களே காரணம் என சுற்றுசூழல் செயற்பாட்டாளர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில் வெப்ப அலை தொடர்பாக மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு சுற்றுசூழல் செயற்பாட்டாளர், பூவுலகின் நண்பர்கள் கோ.சுந்தர்ராஜன் பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், “2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் உலக பன்னாட்டு குழுவால் 6வது மதிப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில், ‘கால நிலை மாற்றம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் மனித செயல்பாடுகளே என்பதை மறுத்தளிக்க முடியாத வகையில் நிரூபித்துள்ளோம்.
இதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட 5வது மதிப்பீட்டு அறிக்கையில் 70 சதவீதம் மனிதர்களும், 30 சதவீதம் இயற்கையும் காலநிலை மாற்றத்திற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த அறிக்கையில் முழுக்க முழுக்க காலநிலை மாற்றத்திற்கு மனிதர்கள் தான் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி தமிழகத்தில் 272 நாட்கள் வெப்பமான நாட்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் குறைந்தபட்சம் 100 நாட்கள் அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். தற்போது ஏற்பட்டு வரும் அதிகபட்ச வெப்பநிலைக்கு முக்கிய காரணம் “எதிர் புயல்”.
புயல் ஒரு திசையில் செயல்பட்டால், “எதிர் புயல்” வேறொரு திசையில் செயல்படும். இதன்மூலம், உலகின் ஒரு பகுதியில் தீவிரமான வெப்பமும், மற்றொரு பகுதியில் தீவிரமான மழைப்பொழிவும் இருக்கும்.
1986 பிப்ரவரி மாதத்திற்கு பின் இந்த உலகத்தில் பிறந்த எந்த குழந்தையும் தனது வாழ்நாளில் ஒரே ஒரு மாதத்தைக்கூட இயல்பான மாதமாக பார்க்க முடியாது எனவும் 6ஆம் மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 2023ஆம் ஆண்டை மிக அதிக வெப்பம் பதிவான ஆண்டாக உலக வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், 2023ஆம் ஆண்டில் எதிர்ப்பார்த்ததை விட அதிக வெப்பம் பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் ஹீட் ஸ்டோக் ஆரம்பித்துள்ளது. வெப்பம் அதிகரித்தால், மாரடைப்பு ஏற்படும். மேலும் பல பாதிப்புகள் ஏற்படும்.
இனி வரப்போகும் காலங்களில் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கும். ஒருவேளை 2024ஆம் ஆண்டு 2023ஆம் ஆண்டை விட அதிக வெப்பநிலை பதிவான ஆண்டாக அறிவிக்கப்படலாம்.” என கூறினார்.
நேர்காணல் : ஃபெலிக்ஸ் இன்பஒளி
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கெஜ்ரிவாலுக்கு பெயில் கிடைக்குமா? இடைக்கால உத்தரவு எப்போது?
“சுருக்கமான திங்கள்”: சிஎஸ்ஐஆர் புதிய அறிவிப்பு!