சாம்சங் போன் என்றாலே அனைவருக்கும் தனி பிரியம் உண்டு. பட்டன் போன் காலம் தொடங்கி இப்போதைய ஸ்மார்ட்போன் காலம் வரை தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது சாம்சங் நிறுவனம்.
தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சாம்சங் கேலக்சி A55, சாம்சங் கேலக்சி A35 என இரண்டு 5ஜி ஸ்மார்ட் போன்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஸ்மார்ட் போன்கள் மார்ச் 14-ம் தேதி முதல் சாம்சங் ஸ்டோர்கள் மற்றும் ரீடெயில் கடைகளில் மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த இரண்டு போன்களின் விலை விவரங்களை சாம்சங் இன்னும் வெளியிடவில்லை. சிறப்பம்சங்கள் மட்டும் தெரியவந்துள்ளன.
சாம்சங் கேலக்சி A55 மற்றும் A35 ஆகிய இரண்டு ஸ்மார்ட் போன்களும் எக்சினோஸ் ப்ராசசர் மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளே விஷன் பூஸ்டர் அம்சத்துடன் வருகிறது.
25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன், ஆஸம் ஐஸ்ப்ளு, ஆஸம் லீலக் மற்றும் ஆஸம் நேவி ப்ளு ஆகிய மூன்று நிறங்களில் வெளிவரும் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்சி A35
எக்சினோஸ் 1380 சிப்செட் அம்சத்துடன் 6GB மற்றும் 8 GB ரேம் வேரியண்ட்களில் கிடைக்கும். 50MP+8MP+5MP ட்ரிப்பிள் கேமரா, 16 MP செல்பி கேமரா மற்றும் ப்ளாஸ்டிக் ப்ரேம் உடன் கூடிய க்ளாஸ் பாடி இடம் பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்சி A55
எக்சினோஸ் 1480 சிப்செட் அம்சத்துடன் 8GB மற்றும் 12GB ரேம் வேரியண்ட்களில் கிடைக்கும். 50MP+12MP+5MP ட்ரிப்பிள் கேமரா, 32 MP செல்பி கேமரா மற்றும் க்ளாஸ் சாண்ட்விச் டிசைனுடன் கூடிய மெட்டல் பாடி இடம் பெற்றுள்ளது.
இரண்டு போன்களும் one UI 6 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. 128GB மற்றும் 256GB ஸ்டோரேஜில் வருகிறது. 5000 mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆரணியா? வேலூரா? – அதிமுகவிடம் மன்சூர் அலிகான் வைத்த டிமாண்ட்!