சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளரை தேசியக் கொடி ஏற்ற வைத்த நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
77வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு சுதந்திர தினத்தை மக்கள் கொண்டாடினர்.
அந்த வகையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். பின்னர் தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைத்து இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.
சுதந்திர தின விழாவில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை அழைத்துக் கொடியேற்ற வைத்தது அப்பகுதி மக்களிடத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
தமிழ்நாட்டிற்கு தண்ணீர்: பாஜக கோரிக்கையை நிராகரித்த கர்நாடக அரசு
சுதந்திர தினத்தில் பேச ஆரம்பித்த மேயர்… புறக்கணித்து வெளியேறிய திமுகவினர்!