இன்றைய போட்டியானது புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்சிற்கும்(CSK) ஐந்தாவது இடத்தில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயன்டிற்கும்(LSG) நடைபெற்றது.
ஐபிஎல் தொடரில் சிஸ்கே அணி விளையாடும் போட்டி என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காது. அதிலும் சென்னை சேப்பாக்கத்தில் போட்டி என்றால் மைதானமே மஞ்சள் படையால் சூழ்ந்திருக்கும்.
இன்றைய தினம் டாஸ் வென்ற LSG பந்து வீச்சை தோ்வு செய்தது. CSK அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினாா்கள். ரகானே முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டை கைப்பற்றி LSG அணிக்கான முதல் விக்கெட்டை பதிவு செய்தார் மேட் ஹென்றி.
அடுத்து வந்த மிட்செல் மற்றும் ஜடேஜா இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய நிலையில் ஏற்கனவே களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் களமிறங்கிய சிவம் துபே ஆகியோரின் காம்போ நன்றாகவே அமைந்தது. இவர்கள் இருவரின் அதிரடி ஆட்டம் 20ஆவது ஓவர் வரை தொடர்ந்தது. சிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்கள் விளாசிய நிலையில் 20ஆவது ஓவர் முடிய 2 பந்துகள் இருந்தபோது ரன்அவுட் ஆகி வெளியேறினார்.
கடைசி இரண்டு பந்துகளில் மைதானத்திற்குள் வந்தார் எம்.எஸ்.தோனி. வழக்கம் போல அரங்கமே அதிர வரேவற்பு அளித்த ரசிகர்களின் விருப்பம் தற்போது ஸ்ட்ரைக்கில் இருக்கும் ருதுராஜ் கெய்வாட் சிங்கிள் எடுத்து கடைசி பந்தையாவது எம்.எஸ்.தோனி விளையாட வேண்டும் என்பதாகவே இருந்தது. அதற்கேற்றாற்போல் ருதுராஜ் சிங்கிள் எடுக்க ஸ்ட்ரைக் தோனி வசம் சென்றது. கடைசி பந்தை பவுண்டரி அடித்து ரசிகர்களை ஆறுதல் படுத்தினார் எம்.எஸ்.தோனி. கடைசி வரை களத்தில் இருந்த கேப்டன் ருதுராஜ் கெய்வாட் 60 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார். ஐபிஎல் தொடரில் இது இவரது இரண்டாவது சதமாகும்.
CSK அணியின் மொத்த ஸ்கோர் 210/4.
வெற்றிபெற 211 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் LSG அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர். இருவரும் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்து டிகாக் முதல் ஓவரிலும், கே.எல்.ராகுல் 5ஆவது ஓவரிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் படிக்கல் இணையில் படிக்கல் பெரிதாக ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த பூரனும் 17 ஆவது ஓவரி்ல் 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக வந்த ஹூடா 17 ரன்கள் எடுத்த நிலையில், கடைசி வரை களத்தில் நின்று 124 ரன்கள் விளாசி LSGஐ வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் ஸ்டோனிஸ். இன்றைய போட்டியில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
LSG அணியின் மற்ற வீரர்கள் யாரும் 40 ரன்களைக் கூட தாண்டாத நிலையில் 124 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு காரணமானார் ஸ்டோனிஸ்.
LSG அணியின் மொத்த ஸ்கோர் 213/4.
–பவித்ரா பலராமன்
தீப்பெட்டி இருக்கா? அப்டேட் குமாரு
சூறாவளி பிரச்சாரம்… 1.22 கோடி பேரை சந்தித்த உதயநிதி : பயணித்தது எவ்வளவு தூரம் தெரியுமா?