வெஜ் பப்ஸ் சாப்பிட்டுகிட்டே டீய உறிஞ்சிக் குடிச்சுக்கிட்டிருந்தேன். செல்போன்ல தேர்தல் பிரச்சார வீடியோ ஓடிக்கிட்டிருந்துச்சு. என்னோட செல்போனை எட்டிப் பாத்த டீ கடை மாஸ்டர், ‘அண்ணே… முக்கியமான ஒருத்தர் இன்னும் பிரச்சாரத்துக்கே வரலையே… எப்பண்ணே வருவாரு?’ அப்படினு கேட்டாரு.
நானும் ரொம்ப ஆர்வமா, ‘யாரு மோடியா?’னு கேட்டேன். இல்லைனு தலையாட்டினாரு. முதல்வர் ஸ்டாலினானு கேட்டேன். அவரும் இல்லைனு தலையாட்டினாரு.
அப்புறம் யாரோட பிரச்சாரத்தை எதிர்ப்பார்க்குறீங்கனு கேட்டேன்.
’என்னண்னே நீங்களே இப்படி பேசுறீங்க. நம்ம ஆளுநர் ரவியோட பிரச்சாரப் பயணம் பத்தி இன்னும் லிஸ்ட் வரலையே… அதுமட்டும்தான் இன்னும் அவர் பண்ணலை. அதைத்தான் கேட்டேன்’னு போட்டாரு ஒரு போடு.
’யோவ்… நீ டீ மாஸ்டர் இல்லய்யா… பொலிடிக்கல் மாஸ்டர்’னு அவருக்கு ஒரு பட்டத்தைக் கொடுத்துட்டு நான் ஆபீசுக்கு வந்துட்டேன்.
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
சப்பாணி
உணவு ,உடை, உறைவிடம்,
சி டைப் சார்ஜர்
-அடிப்படைத் தேவைகள்
Rafic
~ குழந்தை ராமுக்கு கூட ஓய்வு குடுக்குறாங்க..
~ அந்த ராமுக்கு கோயில் கட்டுன நம்ம ஜி 24 மணி நேரமும் ஓய்வில்லாம உழைக்கிறாரு.. அப்போ எங்க ஜி தானே மகான்
வசந்த்
அயோத்தி ராமர் 5 வயது குழந்தை அவருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு வேண்டும்.
அப்ப அடுத்த வருசம் ஸ்கூல் போயிடுவார் இல்லடா.
balebalu
ஓரங்களில் உடைத்து விடப்படுவதெற்கென்றே கட்டப்படுவது தான்
“ஸ்பீட் பிரேக்கர் ”
ச ப் பா ணி
நேரம் போவதே தெரியாமல் இருந்தது..அப்புறம்தான் தெரிந்தது கடிகாரம் நின்று போய் இருந்தது
அரே ஓ சம்போ
Mannar & company
என்ன பெரிய AI technology
பொண்டாட்டியோட eye அசைவுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு?!
Sasikumar J
~ கடவுள் மேல பாரத்தை போட்டு இதை ஆரம்பிக்கிறேன்…
~ என் மேல பாரத்தை போட்டு ஆரம்பிச்சா நான் எப்படி உனக்கு நல்லது செய்ய முடியும்…!
குருநாதா
விலகிச் செல்ல சொல்கிறாய் விலக மனம் இல்லாமல் நான்…
டேய் ஹார்ன் அடிச்சா விலகி போங்கடா…
செங்காந்தள்
நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்கப் போகிறேன் மாமா
நீதிமன்றத்திலேயா மாப்பிள்ளை?
அரசியல் கட்சி சேர்ந்து மாமா
Kirachand
முடியக்கூடாது என்று நாம் நினைப்பது ஞாயிற்றுக்கிழமை…
விடியக்கூடாது என்று நினைப்பது திங்கள் கிழமை..
நெல்லை அண்ணாச்சி
ராமர் கோவிலால் உ.பி.க்கு
4 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும்.,அண்ணாமலை
# என்னை வச்சி business பண்ணுறிங்களா..!? ராமர்…upset..!!
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தளபதி 69: தெலுங்கு இயக்குநரை ‘லாக்’ செய்த விஜய்?
உழைக்கும் எறும்பு தமிழ்நாடு,.. ஊதாரி சில்வண்டு உத்திரப்பிரதேசம்- கனிமொழி சொன்ன குட்டி ஸ்டோரி!