தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 8 ஆயிரம் கிமீ தூரத்துக்கும் அதிகமாக பயணித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மார்ச் இறுதி முதலே தீவிர பிரச்சாரத்தில் இறங்கினர்.
தமிழ்நாடு முழுவதும் அனல் பறந்த பிரச்சாரம் தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி முடிவடைந்தது.
இதில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் மார்ச் 22 ஆம் தேதி திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தின் மூலம் பிரச்சாரத்தை தொடங்கினார்.
ஆனால் உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் முதல்வருக்கு அறிவுறுத்தினர். எனினும் அவர், மார்ச் 22 தொடங்கி ஏப்ரல் 17 வரை 40 தொகுதிகளிலும் இருபது இடங்களில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார்.
இந்தசூழலில் முதல்வர் செல்லாத இடங்களுக்கெல்லாம் அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்று பிரச்சாரம் செய்தார்.
கடந்த 2019 தேர்தலில் ஒற்றைச் செங்கலை கையில் எடுத்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின், இந்த தேர்தலில் “29 பைசா” என்ற பதாகையை வைத்து பிரச்சாரம் செய்தது மக்களிடையே கவனத்தை ஈர்த்தது.
அதாவது, தமிழ்நாடு அரசு ஒரு ரூபாய் வரிகொடுத்தால், மத்திய அரசு நமக்கு 29 பைசாதான் கொடுக்கிறது என்பதை குறிப்பிடும் வகையில் இந்த பதாகையை ஏந்தி பிரச்சாரம் செய்தார்.
இந்தநிலையில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்துக்காக உதயநிதி ஸ்டாலின் 8,465 கிலோ மீட்டர் பயணித்திருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.
திமுக வட்டாரங்களில் இதுகுறித்து கூறும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின் செல்லாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று கடந்த 24 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8,465 கிலோ மீட்டர் பயணம் செய்து, 122 பிரச்சார முனைகளில் 3,726 நிமிடங்கள் பேசியுள்ளார் உதயநிதி.
ஒவ்வொரு பிரச்சார பகுதியிலும் இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் எனச் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சந்தித்து நேரடிப் பிரச்சாரம் செய்துள்ளார்.
இந்தப் பிரச்சாரக் கூட்டங்களில் மட்டும் சுமார் 1 கோடியே 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் தி.மு.க. தொண்டர்களையும் சந்தித்துள்ளார்.
அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி 24 நாட்களில், 7,720 கி.மீ. பயணம் செய்து, 33 மாவட்டங்களில், 55 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளார்.
பா.ஜ.க.வின் அண்ணாமலை 20 நாட்களில் 3,264 கி.மீ.பயணம் செய்து, 18 மாவட்டங்களில் 25 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்” என்கிறார்கள் திமுக தலைமை வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
டிஜிட்டல் திண்ணை: திமுகவின் மத்திய அமைச்சர்கள் யார் யார்? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!
கர்நாடகாவில் காங்கிரஸுக்கு ஆதரவு : திருமாவளவன்
இந்த தேர்தல்ல மகா மொக்கையான பிரச்சாரத்தை முன் எடுத்தது இவரு தான்..ரொம்ப ஒர்ஸ்டான பாயிண்ட்ஸே இல்லாத வறட்டு நேர கடத்தல்…இதே பாணி தொடரனும் பீமுக 26ல் சவக்குழிக்கு போய்டும்…
நன்றி உதய்ணா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣