ஆபீஸ்ல ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேசிட்டு இருக்கும்போது தம்பி ஒருத்தர் டக்குனு குறுக்க வந்து அண்ணன் தீப்பெட்டி இருக்கா அப்படின்னு கேட்டாரு. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. டக்குனு சுதாரிச்சுக்கிட்டு தம்பி உனக்கு திருச்சியானு கேட்டேன். இல்ல எனக்கு மெட்ராஸ் தான் அப்படின்னு சொன்னாரு. திருச்சியா இருந்தா தீப்பெட்டி கொடுப்பேன். மெட்ராஸா இருந்தா உதயசூரியனையே வச்சுக்கனு சொன்னேன். அவரு திருச்சிக்கும் மெட்ராசுக்கும் வித்தியாசம் தெரியாதவரா… இல்லேன்னா தீப்பெட்டிக்கும் உதயசூரியனுக்கும் வித்தியாசம் தெரியாதவரா அப்படின்னு பட்டிமன்றம் நடத்துற அளவுக்கு முழிச்சாரு. எலக்சன் முடிஞ்சாலும் இந்த ஃபயர் இன்னும் ஓயலையே…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
நீங்க அப்டேட் பாருங்க
Kirachand
இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சு-கருத்து தெரிவிக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
மவுன ஆணையம்?
ℳsd இதயவன்
“இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு” – மம்தா பானர்ஜி
ஆனா அதுக்காக எல்லாம் மேற்கு வங்கத்தில் காங்கிரஸ்வுடன் கூட்டணி வைத்து போட்டி போடமாட்டோம்?!
கடைநிலை ஊழியன்
புழுகுற புழுக்கதுக்கே, ரெண்டு லிட்டர் தண்ணி எக்ஸ்ட்ரா குடிக்கணும் போலயே..
வெயில் சார், இப்படி அடிச்சிங்க ‘னா நாங்க என்ன சார் பண்ணுவோம்.
ℳsd இதயவன்
அரசியல்வாதிகள் ஒழுங்கா இருந்தா நாங்க ஏன் அரசியலுக்கு வரப்போறோம்?” – விஷால்
பதிலுக்கு நீங்க ஒழுங்கா நடிச்சா நாங்க ஏன் அரசியலில் நடிக்க போறோம் னு கேட்க போறாங்க ரத்னம்?!
ச ப் பா ணி
குளியலறை ஆண்களையும் சமையலறை பெண்களையும்
பாடகர்களாக்கி விடுகிறது
balebalu
மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசலில் திணறும் கொடைக்கானல் -செய்தி
‘பெருங்களத்தூரின்’ வாழ்வு தனை கவ்வி கொண்டது ‘கொடைக்கானல்’
mohanram.ko
மே 4 ந் தேதி முதல் கத்திரி வெயில்
மே 4 வரை வெயில் பயங்கரமா இருக்கும். மே 4 க்கு பிறகு பயங்கர வெயிலா இருக்கும்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இவனுகள்ல யாரையாவது அவுட் ஆக்கினா தோனி வந்து பொளப்பாப்ல, இவனுகளோ பாலுக்கு ரெண்டு சிக்ஸ் அடிக்கறானுக
டெலிகேட் பொசிசன் பார் லக்னோ…
கோழியின் கிறுக்கல்!
‘கோபமா?’ எனும் கேள்விக்கு,
‘எனக்கென்ன கோபம்?’ என்று பதில் வந்தால் கடுங்கோபத்தில் இருக்கிறார் என்றுப் பொருள்படும்!!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
சூறாவளி பிரச்சாரம்… 1.22 கோடி பேரை சந்தித்த உதயநிதி : பயணித்தது எவ்வளவு தூரம் தெரியுமா?
டிஜிட்டல் திண்ணை: திமுகவின் மத்திய அமைச்சர்கள் யார் யார்? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!