மழைக்கு நடுவே தடுமாறிய நியூசிலாந்து… தொடரை கைப்பற்றிய இந்தியா!

விளையாட்டு

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி கடந்த 18ம் தேதி தொடங்கிய முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடியான சதத்தால் 191 ரன்கள் குவித்த இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து தொடரை வெல்லும் நோக்குடன் இன்று நேப்பியர் மைதானத்தில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியுசிலாந்து அணியை எதிர்கொண்டது இந்தியா.

சீட்டுக்கட்டாய் சரிந்த நியூசிலாந்து

இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து ஆட்டம் மழையால் தாமதமாகவே தொடங்கியது.

கேப்டன் வில்லியம்சன் இன்றி சவூதி தலைமையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடரை சமன் செய்யும் நோக்குடன் ஆட்டத்தை தொடங்கியது.

எனினும் இந்திய அணியின் தரமான பந்துவீச்சின் முன் நியூசிலாந்து அணி தடுமாறியது.

அந்த அணியில் தொடக்க வீரர் கான்வே(59) மற்றும் பிலிப்ஸ்(54) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர்.

அதே வேளையில் இந்திய அணியின் தரப்பில் சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் இருவரும் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி நியூசிலாந்து அணியை முற்றிலுமாக சிதைத்தனர்.

குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சொதப்பிய தொடக்க வீரர்கள்!

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான இஷான் கிஷன் 10 ரன்னிலும், ரிஷப் பண்ட் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அவர்களை தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர்(0) மற்றும் சூர்யகுமார் யாதவ் (13) ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

மழையால் ஆட்டம் டை!

எனினும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டம் இந்தியாவின் சரிவை தடுத்து நிறுத்தியது.

இதற்கிடையே ஆட்டத்தின் 9வது ஓவரில் இந்திய அணி 75 ரன்கள் குவித்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஹர்திக் 30 ரன்களும், ஹூடா 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 3வது கடைசி டி20 போட்டி சமனில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.

இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியை வென்றிருந்த நிலையில் 1-0 என்ற கணக்கில் தொடரை வென்றது இந்திய அணி.

மழையின் இடையூரின்றி நடைபெற்ற 2வது போட்டியில் அதிரடி சதம் கண்ட சூர்யகுமார் யாதவ் தொடர் நாயகன் விருதும், கடைசி போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதும் கைப்பற்றினர்.

கிறிஸ்டோபர் ஜெமா

“சைதை சாதிக்கைவிட மோசமாக பேசினார் சூர்யா”: காயத்ரி ரகுராம்

அவ்வை நடராசன் இறுதி ஊர்வலம் : உடலை சுமந்து சென்ற வைரமுத்து, ஜெகத்ரட்சகன்

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.