License required to breed dogs: Radhakrishnan

நாய்களை வளர்க்க உரிமம் அவசியம்: ராதாகிருஷ்ணன்

தமிழகம்

நாய்களை வளர்க்க நிச்சயமாக உரிமம் இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று (மே 6) தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டிருத்த பூங்கா காவலாளியின் மகள் சுதக்‌ஷாவை (வயது 5) 2 ராட்வில்லர் வகை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது.

இதனால், பலத்த காயமடைந்த சிறுமிக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, நாயின் உரிமையாளர் புகழேந்தி மீது ஆயிரம் விளக்கு காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடன் இன்று (மே 6) பேசியதாவது, “சுதக்‌ஷா என்ற சிறுமியை நாய் கடித்த விவகாரம் மிகுந்த வேதனையளிக்கிறது. அந்த சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுத் தொடர்பாக, நாயினை வளர்த்தவரிடம் உரிய விசாரணை நடத்தப்படும். அவர்களிடம் நாய் வளர்ப்பதற்கான உரிமம் இல்லை. வளர்ப்பு உரிமம் பெறாதது குறித்தும் அவர்களிடம் தனி விசாரணை நடத்தப்படும்.

ஏற்கனவே, அமெரிக்கன் புல் வகை நாய்கள் உள்பட 23 வகையான முரட்டு தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது என ஒன்றிய அரசு தடை விதித்திருந்தது.

ஆனால், இதனை உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை, கர்நாடகா உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களும் தற்காலிக தடை நீக்கம் செய்தது. நாய்களை வளர்ப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன.

நாய்களை வளர்ப்பவர்கள் அது ஒரு சிறந்த துணையாக உள்ளதாக கூறுகிறார்கள், ஆனால், அது மற்றவர்களுக்கு இடையூறாக உள்ளது.

நாய்களுக்கான தடுப்பூசியினை கட்டாயமாக செலுத்த வேண்டும். வீட்டில் எந்த செல்லப்பிராணிகளை வளர்க்கவேண்டும் என்றாலும் உரிமம் பெற வேண்டும்.

ஆன்லைனில் கூட வளர்ப்பு பிராணிகளுக்கான உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என விழிப்புணர்வு செய்யப்படுகிறது. தொடர்ந்து இலவச தடுப்பூசிகள் அரசால் கொடுக்கப்படுகிறது.

சென்னையில் யார், யார் ராட்வில்லர் வகை நாய்கள் வைத்துள்ளனர் என்று கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கு முன்னதாக, மாநகராட்சி மூலம் சில தெரு நாய்கள் பிடிக்கப்பட்டது. அப்போதும் சமூக வலைதளங்களில் எங்களுக்கு எதிரான கருத்துகள் அதிகம் பரவின.

எனவே, செல்லப்பிராணிகளை வளர்க்கும் ஒவ்வொருவரும் உரிமம் பெறுவது அவசியம்” என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தியன் 2 ரிலீஸ் தள்ளிப்போகிறதா? – காரணம் என்ன?

பிளஸ் 2 ரிசல்ட்: தமிழ் பாடத்தில் இத்தனை பேர் சதமா… முழு விவரம் இதோ!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *