பிளஸ் 2 பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று (மே 6) வெளியான நிலையில், தமிழ் பாடத்தில் 35 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
2023-24ஆம் ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில் மொத்தமாக 94.56 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடத்தில் உள்ளனர்.
94.56% மாணவர்கள் தேர்ச்சி
அரசுப்பள்ளிகளில் 91.02 சதவீத மாணவர்களும், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 95.49 சதவீத மாணவர்களும், தனியார் பள்ளிகளில் 96.07 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெண்கள் மட்டும் பயிலும் பள்ளியில் 96.39 சதவீதமும், இருபாலர் பயிலும் பள்ளியில் 94.07 சதவீதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
5,603 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 5,161 மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் தேர்வெழுதிய நிலையில், 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுவாக மாணவர்கள் 92.32 சதவீதமும், மாணவிகள் 96.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு 94.03 சதவீதம் மொத்த தேர்ச்சியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடவாரியாக நூறு மதிப்பெண் பெற்றவர்கள்
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணினி அறிவியல் பிரிவில் அதிகபட்சமாக 6,996 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தமிழ் – 35 பேர்
ஆங்கிலம் – 7 பேர்
இயற்பியல் – 633 பேர்
வேதியியல் – 471 பேர்
உயிரியல் – 652 பேர்
கணிதம் – 2,587 பேர்
தாவரவியல் – 90 பேர்
விலங்கியல் – 382 பேர்
வணிகவியல் – 6,145 பேர்
கணக்குப் பதிவியல் – 1,647 பேர்
பொருளியல் – 3,299 பேர்
கணினி பயன்பாடுகள் – 2,251 பேர்
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் – தலா 210 பேர்
இதில், 26,352 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடப்பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதம்:
அறிவியல் பாடப் பிரிவுகள் – 96.35%
வணிகவியல் பாடப்பிரிவுகள் – 92.46%
கலைப்பிரிவுகள் – 85.67%
தொழிற்பாடப் பிரிவுகள் – 85.85%
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிளஸ் 2 தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்?
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: மே 15-க்கு ஒத்திவைப்பு!