Income tax raid in chennai

சென்னையில் வருமான வரித்துறை சோதனை!

தமிழகம்

சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் இன்று (ஜனவரி 9) காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னை  தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள Refex என்ற தனியார் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல, மந்தைவெளி, புரசைவாக்கம், மயிலாப்பூர் ஆகிய இடங்களிலும் வருமானவரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது.

சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வாரம் தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மோனிஷா

நெருங்கும் பொங்கல்: குறையும் தங்கம் விலை!

தமிழகத்தில் எத்தனை சதவிகிதம் பேருந்துகள் இயக்கம்? – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *